பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 302


1799 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17 ஆம் நாள். கயத்தாற்று முகாம்

இதனால் திருநெல்வேலிப் பாளையக்காரர்களும் பாளையங்களில் வாழும் மக்களும் அறிய வேண்டியது; கலெக்டரிடம் தொடர்பு கொண்ட திருநெல்வேலி பாளையக்காரர் அனைவருடைய ஒழுங்கற்ற நடவடிக்கைகளையும் விசாரணை செய்ய அரசாங்கத்தால் மேஜர் ஜான் பானர்மன் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏழாயிரம் பண்ணை, நாகலாபுரம், கொல்லாப்பட்டி, காடல்குடி, குளத்தூர் பாளையங்களிலுள்ள பல பாளையக்காரர்களின் ஒழுக்கத்தைப் பற்றி முழு விசாரணை செய்தபோது, கம்பெனியில் பாதுகாப்பிலிருக்கும் சிவகிரி பாளையக்காரனுக்கு எதிராகப் பாஞ்சாலங்குறிச்சியுடன் சேர்ந்து கொண்டு போர் தொடுத்தது, கீழ்ப்படியாமை, கம்பெனி அரசாங்கத்திற்கு எதிராகக் கலகம் செய்தது, கலெக்டரின் கட்டளைகளை அவமதித்தது, நாட்டின் அமைதியைக் குலைத்தது, நாட்டு மக்களைத் துன்புறுத்திக் கொலை செய்தது, வரி கட்ட மறுத்தது முதலிய குற்றங்களை அப்பாளையக்காரர்கள் அனைவரும் ஒருமுகமாகச் (உம்!-ந.ச.) செய்திருக்கிறார்கள். பானர்மனுக்கு அளிக்கப்பட்ட குறிப்புகளின் படி இத்தகைய குற்றங்கள் மிகக் கொடுமையானவை; அதனால் கம்பெனி அவர்களிடம் மிக்க வெறுப்படைந்துள்ளது. எனவே பாஞ்சாலங்குறிச்சி, நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை, கோலார் பட்டி, கடல் குடி, குளத்தூர் பாளையங்கள், அப்பாளையக் காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அப் பாளையங்கள் கம்பெனியாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதை மக்கள் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

மேற்கண்ட பாளையங்களிலுள்ள கோட்டைகள் அனைத்தும் பயனற்றவை, தேவையற்றவை என்று உறுதி செய்திருப்பதால் அவற்றை அழிக்கக் கட்டளை பிறப்பித்திருப்பதை அறிய வேண்டும். மேலும் பணியாளர்களும் மக்களும் ஆயுதந்தாங்கி இருப்பதால் (யாருடைய நாட்டைப் பற்றி யார் சொல்வது? - ந.ச.) பல இடையூறுகள் ஏற்படுகின்றன. நாடு முழுவதிலும் கொடுமைகள் கூத்தாடுகின்றன. எனவே, பணியாளர்கள், காவல்காரர்கள், சேர்வைகாரர்கள், பொதுமக்கள் அல்லது மற்ற எந்த மனிதனாலும் யாராயிருப்பினும் துப்பாக்கி, சிறுதுப்பாக்கி, ஈட்டி, வேல் போன்ற கொலை செய்யப் பயன்படுத்தும் ஆயுதங்களை வைத்திருப்பதாக அறிந்தாலும், மறைவாக வைத்திருப்பதாகக் கண்டறிந்தாலும் ஒரே விதமான தண்டனைக்கு உரியவராவர். எனவே மேற்கண்ட பாளையங்களிலுள்ள பணியாளர்கள், மக்கள், அனைவரும் தங்களிடமுள்ள ஆயுதங்களை மேஜர் பானர்மனால் நியமிக்கப்பட்ட அதி