பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

303 கால்டுவெல்

காளிகளிடம் ஒப்புவித்துவிட வேண்டும் என்று கட்டளையிடப்படுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலுள்ள தலைவனும் தன் கிராமத்தாருக்கு இக் கட்டளையை விரைவாய்த் தெரியப்படுத்தி, விரைவில் அத்தகைய ஆயுதங்களை வைத்திருப்பவர் யாரென விசாரித்துக் குறிப்பிடப்பட்டவரிடம் விரைந்து ஒப்படைக்காவிடில் அத்தலைவனே கடுமையான தண்டனைக்குப் பொறுப்பாளியாவான். இதனால் கம்பெனியாரால் எடுத்துக் கொள்ளப்பட்ட பாளையங்களில் அமைதியை நிலைநாட்ட, அமைதியான மக்கள் மனநிறைவுடன் பயிர்த்தொழிலில் ஈடுபட, இந்ந நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்படுவதால் கம்பெனி அதிகாரிகளை எந்தக் கிராமத்தார் எதிர்த்தாலும், அத்தகைய கலகங்களில் துப்பாக்கி, நாட்டுத்துப்பாக்கி, ஈட்டி, வேல் முதலியவை பயன்படுத்தப்பட்டாலும் கிராமத்தலைமை அதிகாரிக்கு சாத்தண்டனை ஏற்படலாம். இத்தண்டனையைத் தவிர்க்கக் கிராமத் தலைவர் அத்தகைய கலகங்கள் நடைபெற்ற மூன்று நாட்களுக்குள் அந்த எதிர்ப்புகளில் கலந்து கொண்ட எல்லா மக்களின் பெயரையும் தெரிவித்து அக்குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் எண்பித்தல் வேண்டும். மேற்கண்ட ஆறு பாளையங்களைக் கம்பெனி ஏற்றுக் கொண்டது கொலைத் தன்மையுடைய செயல்களுக்கான தண்டனை. இனி மக்கள் கம்பெனி அரசிடம் மரியாதையாகவும், கீழ்ப்படிந்தும் இருப்பார்களானால் இது போன்று பல மக்களின் உயிர்களும் பலியாகாது; கம்பெனியும் பாளையங்களை ஏற்றுக் கொள்ளாது என்பதையும் அவர்கள் உணர்தல் வேண்டும். அப்படி உணர்ந்தால் அவர்களால் அதற்கேற்ப நடக்க இயலும். இந்த உறுதிகள் கொடுக்கப் பட்டிருப்பதால் ஆயுதங்களை வழக்கமாக ஏந்திச் செல்லும் முக்கியமாக சேர்வைக்காரர் பணியாட்கள் தங்கள் கொடுமைவாய்ந்த ஆயுதங்களை (பகைவன் குலை நடுங்கியது பாரீர்! - நச) மகிழ்ச்சியுடன் நீக்கிவிடுவார் களாக, அவர்கள் நாட்டில் உழவை ஏற்றுத் தங்கள் இன்பத்தைப் பெருக்கிக் கொள்வார்களாக. அதனால் கம்பெனியின் சலுகைக்குத் தகுதி பெறுவார்கள். அரசு அவர்களை எல்லாத் துன்பங்களிலிருந்தும் காக்கும்.

கோட்டைகள் அழிக்கப்பட்டன

செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கயத்தாற்றில் திருநெல்வேலி பாளையக்காரர்களைக் கூட்டி மேஜர் பானர்மன் அளித்த பேட்டியில் அவர் கோட்டைகளை அழிப்பதற்கும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதற்கும் ஒவ்வொரு பாளையக்காரனும் தானே முன்வந்து கோட்டைகளை அழிப்பதில் ஈடுபடும்படித் தூண்ட வேண்டுமென்ற அறிக்கை