பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

309 கால்டுவெல்

சுற்றுப்புறங்களுக்கு அத்தகைய ஒரு மனிதன் திரும்ப வராமலிருக்க அரசு தனிப்பட்ட அக்கறை எடுத்துக் கொள்ளுமென்று நான் நினைக்கிறேன்.

மேஜர் பானர்மனின் கைதிகளில் பலர் பாளையங்கோட்டைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு சிறையில் வைக்கப்பட்டனர். தூத்துக்குடியில் பொது அதிகாரியாயிருந்த காப்டன் டேவிசனிடம் தாங்களாகவே அடைக்கலம் புகுந்த கைதிகளும் இருந்தனர். அவர்களுள் அண்மையில் தூக்கிலிடப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனின் உடல் பிறந்தவர்களாகிய இருவர் மேஜர் பானர்மனால் பாளையங்கோட்டைக்கு அனுப்பப்பட்டவருள் மிக முக்கியமான கைதிகள். சிறிது காலத்திற்குப் பின் முழுதும் அழிக்கப்பட்டதாக எண்ணப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை தேவையான நேரத்தில் முன்போலவே வலிமை வாய்ந்த கோட்டையாகத் தரையிலிருந்து கிளம்பத் தயாராயுள்ளது எனக் கண்டு பிடிக்கப்பட்டது. (ஆ! ஆ! ஊமைத்துரையா? கொக்கா? - ந.ச.) இதைக் கண்டறிந்ததும் அரசு மிகவும் பதறியது. ஆனால் கண்டிப்பான விசாரணைக்குப் பிறகு பாஞ்சாலங்குறிச்சி கோட்டைகளும் மற்ற கோட்டைகளும் இடிக்கப்பட்டுவிட்டன என்று தீர்மானமாகத் தெரிந்தது. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை மேஜர் பானர்மன், மாவட்டத்தை விட்டுச் செல்வதற்கு முன்பே அழிக்கப்பட்டு விட்டது. ஆனால் தரைமட்ட மாக்கப்பட்ட மண்கோட்டைகள் விரைவாய் கட்டப்படலாம். அத்தகைய மண்கோட்டைகள் உற்சாகமுள்ள ஒன்று அல்லது இரண்டாயிரம் கூலியாட்கள் இரவும் பகலும் ஓயாது வேலையிலிடுபட்டால் கட்டிவிட முடியும். ஆனால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை போன்ற கோட்டை ஒன்று அல்லது இரண்டு நாள்களில் தரையிலிருந்து மந்திரவாதியின் கோலால் கிளம்புவது போல் கிளம்பும் என்ற சூழ்நிலை பற்றி ஐயப்படத் தக்கது ஒன்றுமில்லை. பிறகு என்ன நேரிட்ட போதிலும் இதுவரை மேஜர் பானர்மனின் வேலை முழுவதும், இதுவரை நடைபெற்று வந்ததைப் போல, முழுமையாகச் செய்யப்பட்டன. 42 கோட்டைகளைத் தாங்களாகவே அழித்துவிடுவதாக வலுவில் பாளையக்காரர் முன் வந்ததே கம்பெனி கட்டளையின் பயனாய் ஏற்பட்ட இணையில்லா வெற்றியாகும். அவ்வெற்றி படைவீரர்களின் கொள்கைகளினாலும், செய்கைப் போக்கினாலும் கிட்டியதாகும்.


அரசுக்கேற்பட்ட எல்லா எதிர்ப்புகளையும் அடக்கி நாட்டில் அமைதியை நிலைநிறுத்தியபின் மேஜர் பானர்மன் அனைத்து அதிகாரி களின் நன்றியையும் ஆசிகளையும் பெற்று போர் வீரர்குரிய விடுப்பில் ஐரோப்பாவிற்குச் சென்றார். அவர் நிலைநாட்டிய அமைதி இரண்டு