பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

313 கால்டுவெல்

பாளைய மக்களும் அவனிடம் இரக்கமும் மரியாதையும் வைத்திருந்தனர். எனவே அவனைச் சின்ன கட்டபொம்மு என்று அழைத்து வந்தனர். மற்றொருவன் அவனைத் தெய்வப்பிறவியாக மக்கள் மதித்து வந்தனர். (அம்மாடி! பகைவனே தரும் சான்று! - ந.ச.) 1719 இல் நடந்த கலகங்களில் ஈடுபட்டதற்காக வேறு சிலரும் இவர்களுடன் பாளையங்கோட்டைச் சிறையிலிருந்தனர். ஆட்சி அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்ட அக்குடும்பத்தைச் சேர்ந்த அச்சமூட்டும் தன்மையுடைய கலகக்காரன் சிவத்தையா என்பவன், அவர்களுக்கு நெருங்கிய உறவினன். அதிகாரியை ஏமாற்றித் தப்பிவிட்டான். அவன் தன்னுடன் உடன்பாடு கொண்டவர்களுக்குத் தலைவனாகிக் கைதிகளாகச் சிறையிலிருப்பவர்களைத் தப்புவித்துப் போராட்டத்தைப் புதிதாகத் தொடங்கத் தக்க காலத்தை எதிர்பார்த்திருந்தான்.

பாளையங்கோட்டையிலிருந்து கைதிகள் தப்பித்தலும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிகளும்

கைதிகள் தப்புவதற்கும் கலகங்கள் மறுபடி தொடங்குவதற்கும் முன்பு திருநெல்வேலியிருந்த நிலையைப் பற்றி ஹக்சு பின்வருமாறு விவரிக்கின்றார்:

அரசாங்கத்திடமிருந்து பேரும் புகழும் பெற்று 1800 இன் தொடக்கத்தில் ஐரோப்பாவுக்குக் கப்பலேறுவதற்காக மேஜர் பானர்மன் படையைவிட்டு விலகினார். அப்பதவியை அடுத்துப் பெற வேண்டியவர் மேஜர் ராபர்ட்டனிங். பொது அதிகாரிகளுள் உயர்ந்த பதவியை நாடியதால் பிப்ரவரியில் எங்களை விட்டுச் சென்றார். மாவட்டப் படைத்தலைவராக இருந்ததுடன் திருவாங்கூர் ரெசிடெண்டாகவும் இருந்து பணி புரிந்து வந்த மேஜர் 'கோவின் மக்காலே அவருக்குப் பின் பதவி ஏற்றார். நிகழ்ச்சிகளின் நிலை விரைவில் அப்படையைப் பிரிக்க வேண்டிய சூழலை உருவாக்கியது. அவனுடைய தொண்டு திருவாங்கூர் தர்பாரில் சிறிது காலம் கவர்னர் ஜெனரலுக்குத் தேவைப்பட்டது. தற்போது சங்கர நயினார் கோயிலில் மேஜர் ஷெப்பர்ட் தலைமையிலிருக்கும் மூன்றாவது பிரிவுப்படையைச் சங்கரநயினார் கோயிலில் நிறுத்தி வைத்தனர்.லெப்டினன்ட் கைலியின் தலைமையில் வேறு சில படைகள் பாளையங்கோட்டையைச் சுற்றிச் சூழ்ந்திருந்தது. படையில் முக்கியப் பகுதி திருச்சிராப்பள்ளிக்கும் மற்ற இடங்களுக்கும் திரும்பின. அந்த ஆண்டின் இறுதியில் நாடெங்கும் முழு அமைதியுடன் அரசாங்கத்தின் குறிக்கோள்கள் கைவரப்பெற்று மிக்க வளமிகுந்திருந்தது போலத் தோற்ற மளித்தது.

கைதிகள் தப்பிச் சென்றதைப் பற்றி ஜெனரல் வெல்ஷின்