பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 314

குறிப்பு வருமாறு: 1801 பிப்ரவரி 2 ஆம் தேதி எங்கள் படை சங்கர நயினார் கோயிலின் கிழக்குப் பக்கத்தில் (வடமேற்கில்) சுமார் 30 மைல் தூரத்தில் படை அரண் அமைந்திருந்தபோது, எங்கள் முழு இனத்தினரும் சுமார் 20 பெண்களும் கனவான்களும் பாளையங்கோட்டையிலிருந்த மேஜர் மெக்காலேயின் பூங்கா வீட்டில் விருந்துண்டு கொண்டிருந்தோம். சிறையில் வைக்கப்பட்டிருந்த பாளையக்காரக் கைதிகளில் ஒருவன் ஒரு காவல்காரனையும் கோட்டையிலிருந்த மற்றொரு வனையும் ஆயுதமற்றவர்களாக்கி அவர்களைத் தாக்கிவிட்டுச் சிறை யிலிருந்து தப்பி ஓடிவிட்டான். அச்சமூட்டும் மனிதராயும் மாகாணக் கைதிகளாயுமிருந்ததால் அவர்களை இரும்புக் கைச்சங்கிலியுடன் பிணைத்து இதுவரை கவனமாகக் காவல் காத்து வந்தனர். ஆனால் அண்மையில் அவர்களுக்கு ஏற்பட்ட பெரியம்மை காரணமாகச் சில நாட்களுக்கு முன் அவர்கள் கைகளிலிருந்த சங்கிலிகள் அகற்றப்பட்டன. இன்று மாலை அவர்களைச் சேர்ந்தவர்களில் சிலர் ஆயுதங்களை மறைத்துக் கொண்டு மாறுவேடம் பூண்டு கோட்டைக்குள் நுழைந்தனர். முன்னேற்பாட்டின் படி குறிப்பு கொடுத்தவுடன் வாயிற் படியிலிருந்த காவற்காரனைத் தாக்கினர். அப்போது முன்னால் காவல் காத்துக் கொண்டிருந்த இருவரையும் கைதிகள் தாக்கினர். சில காவல் காரர்கள் காயமடைந்தனர். எல்லோருடைய போர்க்கருவிகளையும் பறித்துவிட்டனர். அவர்களுடைய துப்பாக்கிகளை எல்லாம் கைப்பற்றிக் கொண்டு கைதிகள் வெளியிலிருந்து வந்த அவர்களுடைய ஆட்களுக்குத் தலைமை தாங்கி வாயில் காப்போனிடம் பாய்ந்து சென்று அவனைத் தாண்டிக் கொண்டு வாயிற்படி வழியாகத் தப்பியோடி விட்டனர். இன்று பொழுது விடியு முன்னர் முப்பது மைல் தூரத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சிக்குத் தப்பி ஓடிவிட்டனர். வழியிலே ஏறக்குறைய நூறு ஆட்களை வியப்பில் ஆழ்த்தி போர்க் கருவிகளைப் பறித்துக் கொண்டனர். ஓரிடத்தில் உள்நாட்டு அதிகாரியின் தலைமையில் தாக்கிய முழுப் படையையும் திருப்பித் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர். அவர்கள் தப்பிப் பாதுகாப்பான இடத்தை அடைய வேண்டுமென்ற வேகத்தில் எங்கள் படையைத் தாக்கி வீழ்த்தியிருக்கக் கூடிய மகிழ்ச்சியை அடையாமல் எப்படியோ பொன்னான வாய்ப்பினை நழுவ விட்டு விட்டனர். (!-ந.ச.) ஏனெனில் அவர்கள் தப்பியோடிய வழிக்கு ஒரு மைலுக்கும் குறைவான தூரத்தில்தான் தங்கள் படைத் தலைவர்களுடன் இராணுவ அதிகாரிகளும் மற்ற படைவீரர்களும் அவ்வூரைச் சேர்ந்த சிலரும் ஒரே ஒரு நாயக்கக் காவல்காரனால் காக்கப்பட்ட வீட்டிற்குள் கூடியிருந்தோம். அந்த இடத்தைத் தாண்டிச் செல்வதற்கு முன்பே நூற்றுக்கணக்கான ஆட்கள் அவர்களுடன் சேர்ந்து கொண்