பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 316

தாக்கின. பின்பக்கத்தில் சுமார் ஒரு மைல் தொலைவில் அமைந்திருந்த அதே கிராமம் எங்கள் படைகளால் கைப்பற்றப்பட்டது. நாங்கள் முன்புறம் ஏற்பட்ட முதல் தாக்குதலை எதிர்த்துக் கொண்டிருந்தபோது ஆழமான பள்ளங்களில் மறைந்திருந்த எதிரிகளின் படையொன்று எங்களை உடனே தாக்கிற்று. எங்களில் பலர் புதுப் பயிற்சி பெற்றவராகவும் கற்றுக் குட்டிகளாயுமிருந்த காரணத்தினால் அவ்வளவு நெருங்கிய படை எதிர்ப்பைக் கண்டிராதபோதிலும் நவாபு குதிரைப்படையைத் தவிர மற்றெல்லோரும் மிகத் திறமையாக நடந்து கொண்டனர். நவாபு குதிரைப் படையால் ஒரு சிறு பகைவர் படையைக் கூடத் தாக்க இயலவில்லை. எனவே நாங்கள் எங்கள் குதிரைகளைத் திருப்பிப் பெற விரும்பினோம். இருந்தும் ஒரு மணி நேரத்தில் பாளையக்காரர்கள் நாற்பது இறந்த வீரர்களைப் போர்க்களத்திலேயே போட்டுவிட்டுப் பின்வாங்கினர். மதியத்திற்குள் எங்கள் பாசறையில் மறுபடியும் அமைதி நிலவிற்று. எங்கள் தரப்பில் ஆறு பேர்கள் மட்டும் இறந்தனர் என்பதே எதிரிகள் சுடுவதில் திறமையில்லாதவர்கள் என்பதற்குச் சான்றாகும். அந்தக் கிராமத்திலுள்ள காவல் பலப்படுத்தப்பட்டது. மாலை 9 மணி வரை எல்லாம் அமைதி யாயிருந்தன. பிறகு துப்பாக்கியின் ஓசை கிராமத்தின் பக்கத்திலிருந்து வந்து எங்களை விழிப்படையச் செய்தது. (அது சரி! நேரம் பார்த்து...! - ந.ச.) அக்காவல் படையின் மீது தாக்குதல் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு உதவியாக வேறு புதுப்படை வருவதற்குள் அப்படை முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டது. ஓர் இரவைத் தூக்கமின்றிக் கழித்த பின் பொழுது விடிந்ததும் நாங்கள் காலையில் புறப்பட்டு 9 மணிக்குப் பாஞ்சாலங்குறிச்சிக்கருகே உள்ள திறந்தவெளியை அடைந்தோம். அங்கு எங்கள் வியப்பிற்கேற்ப மண்மேடாக்கப்பட்ட கோட்டை இருந்த இடத்தில் பழையபடி ஒரு கோட்டை எழும்பியிருந்தது. அதில் பதினைந்தாயிரம் வீரர்களும் இருந்தனர்.


ஹக்ஸ் தொடர்ந்து கூறுகிறார்: பாளையக்காரர்கள் படை பத்திரமாக அரணமைக்கப்பட்டிருந்ததன்றி வீரர்கள் அனைவரும் கற்பனைக்கு எட்டாத அளவில் (!-ந.ச.) ஆயுதந்தாங்கியவர்களாயிருந்தனர். இதுவரை ஈடுபட்ட முயற்சிகளின் பயனாய் வெற்றியடைந்தமைக்காகப் படை வீரர் முன்னர் மகிழ்ச்சி ஆரவாரமும் செய்து கொண்டிருந்த காட்சி அதற்கு முத்தாய்ப்பு வைத்தாற்போன்றிருந்தது. அவர்கள் எழுப்பியிருந்த அரண் மார்பளவு உயர்ந்த சுவர் முதலியவைகள் நம்ப முடியாத வேகத்துடன் அவர்கள் அவற்றைக் கட்டியிருக்க வேண்டுமென்பதை உணர்த்தி நின்றன. அவர் மேலும் கூறுகிறார்: மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களெல்லாம் இப்பொழுது வெளிப்பட்டன. ஏனெனில் (நாம் முன்பு பார்த்ததுபோல சென்னை அரசு மேஜர் பானர்மனுக்கு இட்ட கட்டளைப்படி)