பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

317 கால்டுவெல்

ஆயுதங்களை விரைவில் தேடிக் கைப்பற்றுவதைவிட அவற்றிற்குள்ள தாராளமான விலையைக் கொடுத்தால் எளிதில் எல்லா ஆயுதங்களும் ஒப்படைக்கப்பட்டுவிடும் என்ற கொள்கை அமுலிலிருந்த காலம் அது. (ஒ! கும்பெனியான் காசுக்கு மயங்கவில்லையா விடுதலை வீரர்கள்! - ந.ச.) பறிமுதல் செய்யப்பட்ட பாளையங்களிலுள்ள மக்கள் ஆங்கிலேயருக்கு எதிராகத் தங்கள் வலிமையைக் காட்டத் தக்க வாய்ப்பு ஏற்பட்டதைக் குறித்து மகிழ்ந்தனர். (உம்! - ந.ச.) ஏனெனில் அரசாங்கம் விரும்பிய அமைதியான வாழ்க்கையைப் பாளையக்காரர்கள் பெரிதும் வெறுத்தார்கள் என்பதில் ஐயமில்லை. (அப்படியா? நல்லது. பகைவரே பாராட்டினால் நண்பர் நைவாரே! - ந.ச.)

பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து பின்வாங்குதல்

இப்பொழுது ஜெனரல் வெல்ஷ் கூறுவதைக் கவனிப்போம்:

வலிமையுள்ள துப்பாக்கி ஒன்றுகூட இல்லாமல், முற்றுகையிடும் படைக்குத் தலைமை தாங்க சில ஐரோப்பிய வீரர்கள் கூட இல்லாமல், பட்டப்பகலில் அவ்விடத்தைக் கைப்பற்ற முயற்சித்தது பைத்தியக்காரத்தனத்தின் அடுத்த செயலாகும். (!-ந.ச.) எனவே, கோட்டைக்கு ஒரு மைல் தூரத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் (கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி, பிறந்த ஊர்) என்ற கிராமத்திற்கு அருகே ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். நாங்கள் அங்கு சதுரமாகப் பாசறையை அமைத்தோம். வடக்கே தானியக் குவியல், தெற்கே ஒரு குளக்கரை, கிழக்குப் பக்கத்தில் கிராமம்; மேற்குத் திக்குக்கு எதிரே பாஞ்சாலக்குறிச்சி. சிறிது உணவும் ஓய்வும் எடுத்துக் கொண்ட பிறகு அப்படையை இரண்டாகப் பிரித்து இரண்டு வெவ்வேறு இடங்களில், எதிரிகள் எங்கள் தாக்குதலை அறியாவண்ணம் மறைத்துக்கொள்ளவாய்ப்பாகப் பொழுது இருட்டியபின், தாக்குவதென்று திட்டமிட்டோம். சிறிது நேரத்திற்குப் பின் எங்களுடைய வேவு ஆட்கள் நாங்கள் விரும்பி ஏற்கத் தகாத செய்தியுடன் திரும்பினர். ஐயாயிரம் பாளையக்காரர்கள் இருட்டின பின் எங்களைத் தாக்கத் தயாராயிருப்பதாக அவர்கள் கூறினர். (!-ந.ச.) இது நாங்கள் எதிர்நோக்காத திடுக்கிடும் செய்தியாகும். முதலாவதாக, மந்திரத்திறனால் ஆறு நாட்களில் முன்போலவே வலிமைவாய்ந்த கோட்டை எங்களுக்கு எதிராக நின்றது. இரண்டாவதாக, அதைக் காப்பவர்கள் எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டவராயிருந்தனர். எண்ணிக்கையில் மிகுந்திருந்த அவர்களே எங்களைத் தாக்குபவர்கள் போலிருந்தார்கள். எனவே, நாங்கள் அங்கிருக்க வேண்டிய தேவை இல்லை எனத் திரும்பிவிடத் தீர்மானித்தோம். வீரர்களும் தலைவர்களும் இரண்டு முறை கடினமான படை நடப்பாலும், இரவு தூக்கமின்மையாலும் மிகத் தளர்ச்சி அடைந்திருந்தனர். எனவே மற்றொரு