பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 318

இரவும் விழித்திருந்து எங்களை எதிர்நோக்கியிருந்த இரவுத் தாக்குதலை அதற்குரிய சுறுசுறுப்புடன் விழிப்புணர்வோடு ஏற்க இயலுமா என்பது ஐயப்பட வேண்டிய செயலாயிருந்தது. எனவே துருப்புகள் எச்சரிக்கப்பட்டன. மாலை இரண்டு மணி அளவில் எங்கள் மூட்டை முடிச்சுகளை நடுவே வைத்து அவற்றைச் சுற்றிலும் நீண்ட சதுரத்தில் படை அமைக்கப்பட்டது. பீரங்கிகள் முன் பக்கத்திலும் புக்கவாட்டிலும் நிரவி அமைக் கப்பட்டது. நாங்கள் கோட்டையைத் தாக்கத் தயாராவது போன்று வெளியே வந்தோம். ஒவ்வொரு பகுதியிலும் வீரர்கள் நிறைந்திருந்தனர். 1500 வீரர்களடங்கிய படையையும் எல்லைக்கு அருகே இரண்டாயிரம் வீரர்கள் மாலை சூரிய ஒளியில் பளபளக்கும் நீண்ட ஈட்டிகளுடன் இருந்தனர் (என்ன காட்சி! - ந.ச.) என்பதை ஒரு வினாடியில் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.


படை அமைப்பு முடிந்ததும் நாங்கள் படை நடப்பைத் தொடங்கினோம். கோட்டையை நோக்கியல்ல; பாளையங் கோட்டையை நோக்கிப் படை புறப்பட்டது. (!!!ந-ச) இடையே இருட்டில் பகைவர் படை ஒன்று உரத்துக் கூவிக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் எங்கள் துப்பாக்கி முனைவரை நெருங்கி வந்துவிட்டது. இப்பொழுது சதுர வடிவத்தை இழந்துவிட்ட எங்கள் படையின் பக்கவாட்டில் நல்வினை வாய்ப்பாய் காப்டன் வாசே தலைமையில் மூன்றாவது அணியைச் சேர்ந்த முதலாவது எறிகுண்டு வீச்சுப்படை, இரண்டு 6 பவுண்டு பீரங்கிகளுடன் அமைந்திருந்தது. அவர்களை நெருக்கத்திலிருந்து தாக்க எண்ணியதால், தொல்லையின்றி அவர்கள் எங்களருகே வரும்வரை அவன் விட்டுவைத்தான். பின்னர் இரண்டு முறை தானே பீரங்கியை வெடித்து 10 எதிரிகளைச் சாய்த்தான் (ஆம்! வெள்ளையர் வெற்றி வீரத்தின் வெற்றி அன்று! பீரங்கியின் வெற்றி! - ந.ச.) எஞ்சியவர் வியப்புடன் விரைவில் சிதறி ஓடித் தப்பினர். அதற்குப் பின் அந்த நீண்ட துன்பம் நிறைந்த படை நடப்பில் எதிரிகளால் எவ்விதத் தொல்லையும் ஏற்படவில்லை. அப்பயணம் இரவு முழுவதும் நீடித்தது. சாலையினருகே உள்ள ஒவ்வொரு புதருக்குப் பின்னும் எதிரிகள் இருப்பார்களோ என்று எங்கள் கற்பனையில் தோன்றிக் கொண்டிருந்த அச்சமே உண்மையில் பகைவர்களுடைய உண்மையானதாக்குதல்களைவிட எங்களைப் பெரிதும் துன்புறுத்தியது. (புலிகள் பற்றிய கிலி.: - ந.ச.) இவ்வாறாக, மூன்றாவது பயணத்தையும் செய்து முடித்தோம். இச்சூழ்நிலையில் எங்கட்கு ஏற்பட்ட இழப்பு இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும்தான். நாங்கள் 10 ஆம் தேதி காலை 9 மணிக்குப் பாளையங்கோட்டையை அடைந்தோம்.