பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

319 கால்டுவெல்


பாளையங்கோட்டையிலிருந்து படைகள் வந்ததும் உடனே கோட்டைத் தாக்குதலைத் தொடங்குவதா வேண்டாமா, அப்படித் தொடங்கினால் மேலும் குழப்பங்கள் நேரிடுமா அல்லது படைகள் சிறிது காலம் பின்வாங்கித் திருச்சியிலிருந்து புதுப்படைகள் வரும்வரை காத்திருப்பது சிறந்ததா என்று எண்ண வேண்டியதாயிற்று என்று ஹக்சு கூறுகிறார். மேலும் அவர் கூறுவதாவது:-

பின் சொல்லப்பட்ட திட்டம் துன்பமானதாயினும் மகிழ்ச்சியுடன் மேஜர் மெக்காலேயும் மேஜர் ஷெப்பர்டும் ஒரு மனதாய் அதற்கு உடன்பட்டனர். 3-வது அணி (3rd Regiment) இரவு நேரக்கூடிய துன்பங்களிலிருந்து எங்களை உறுதியுடன் தொடர்ந்து பாதுகாத்தது.

அதற்குள், நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பல, எதிரிகளுக்கு மிகநலமாகவே அமைந்தன. பிப்ரவரி 27 ஆம் தேதி, வலிமையற்ற நன்கு பாதுகாக்கப்படாத காடல்குடி கோட்டையை ஒரு படை தாக்கியது. ஆனால் எங்கள் எதிரிகள் எப்படியோ குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே எங்கள் தாக்குதலைப் பற்றி அறிந்து காவல்படைக்குத் துணையாக இரண்டாயிரம் பேர்கள் அடங்கிய படையை, உடனே அனுப்பி வைத்தனர். எங்கள் வீரர்களும் முடிவாக அவர்களை எதிர்த்து நின்றனர். வீரமும் ஒழுங்கும் நிறைந்த படையால் எண்ணிக்கை மிகுதியான எதிரிகளை ஒவ்வொரு அடியிலும் எவ்வளவு எதிர்த்துத் தாக்க இயலுமோ அவ்வளவு எதிர்த்துப் போரிட்டனர். போர்க்களத்தில் 3 பேர் கொல்லப் பட்டனர். 18 பேர் காயமடைந்தனர். அவர்களைப் போர்க்களத்திலேயே போட்டு விட்டு எங்கள் படையினர் பின்வாங்கக் கட்டாயப்படுத்தப் பட்டனர். ஆனால் பகைவரின் இழப்பைக் கணக்கிடவே இயலவில்லை.

இப்படியாக, அரசாங்கத்திற்குச் சொந்தமான பல சிறுசிறு கோட்டைகள் பாளையக்காரர் வசம் மாறின. இதனால் பாளையக்காரர்களின் படைக்கலன் சேமிப்பில் சுமார் ஆயிரம் துப்பாக்கிகள் கூடுதலாயின. பாளையங்கோட்டைக்கும் பதினைந்து மைல் தெற்கே ஆற்றங்கரையில் அமைந்திருந்த பலமற்ற கோயில் திருவைகுண்டம். சிறிதே பாதுகாப்புடையது; இது ஒப்புமைக்கோ அல்லது எதிர்நோக்குகளுக்கோ அப்பாற்பட்ட ஒன்றாகத் திகழ்ந்தது. இந்தக் கையளவே அமைந்த சிறிய - ஆனால் வீரம் வாய்ந்த படையை ஓட்ட மேஜர் ஷெப்பர்டு 3வது அணியிலுள்ள பட்டாளத்தின் தலைமையில் இரண்டு 6 பவுண்டு பீரங்களுடன் படையெடுத்துச் சென்றார். மார்ச் மாதம் 13 ஆம் தேதி பாளையங் கோட்டையை அடைந்ததும் அங்குப் பயண மூட்டை மூடிச்சுகளை எறிந்து விட்டனர். 16 ஆம் தேதி காலை ஆற்றின் மறுகரையில் திருவை குண்டம் கோயில் கண்ணுக்குத் தெரிந்தது. அவர்கள் எதிரிகளின்