பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 24


கடல்களிலுமுள்ள முத்துகளையும் இந்தியாவிற்குக் கொண்டுவந்து தன் மகளை அதனால் அணி செய்ய எண்ணினான்”. (ஸ்வன்பேக்ஸினுடைய (Schwanback) மெகஸ் தனிஸ் என்பதன் மக்ரிண்டில் (Mccrindle) மொழி பெயர்ப்பு).

வேறொரு கிரேக்க எழுத்தாளரால் மெகஸ்தனிஸிலுள்ள மற்றொரு பகுதி நமக்குக் கிடைத்துள்ளது. அதில் பாண்டி நாட்டின் உண்மை நிலை, அதன் அரசியல் ஆட்சி பற்றிய சில முக்கிய செய்திகள் கூறப்படுகின்றன. அவை வருமாறு:-

“ஹெர்குலிஸிற்கு இந்தியாவில் ஒரு பெண் பிறந்தாள். அவளை அவன் ‘பாண்டைய’ என்று வழங்கினான்; இந்தியாவில் தென்பகுதியில் கடல் வரை பரவியிருந்த இடத்தை அந்தப் பெண்ணிற்குக் கொடுத்தான். அவளது ஆட்சிக்குட்பட்ட மக்களை 365 கிராமத்தினராக்கி ஒவ்வொரு கிராமத்தினரும் ஒவ்வொரு நாளும் கஜானாவிற்கு அரச காணிக்கையைக் கொண்டு வந்து கொடுக்கும்படிக் கட்டளையிட்டான். அதனால், ஒவ்வொரு நாளும் காணிக்கை செலுத்தி வருபவர்களின் உதவியால் அவ்வப்போது காணிக்கை செலுத்தத் தவறியவர்களை வற்புறுத்திப் பணம் பிரிக்க (வசூல் செய்ய) வசதி ஏற்படும் என்று எண்ணினான்”.

மெகஸ்தனிஸின் இந்திய மக்களைப் பற்றிய புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதை ஒட்டி பிளினி பாண்டிய என்ற ஓர் இனத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். இவர் கூறும் பாண்டியர்கள் எங்கிருந்தார்கள் என்று குறிப்பிட்டாலும் அவர்கள் மேற்கண்ட பாண்டியர்களே என்பதில் ஐயமில்லை. இந்திய மக்களில் பாண்டியர்கள் மட்டுமே பெண்டிரால் ஆளப்பட்டு வந்தனர் என்று அவர் கூறுகிறார். இதுவரை அது உண்மையன்று என்பது தெரிகிறது. அது மதுரையை ஆண்ட பாண்டியர்களுக்குப் பொருந்துமானால் மலையாளக் கடற்கரையிலுள்ள விந்தையான சமூக வழக்கங்களுக்கும் பொருந்தும். ஏனெனில் அங்கு ஒவ்வொரு மரபினரின் சொத்தும் பெண் வழியின் ஆட்சியிலே இருந்து வருகிறது. மெகஸ்தனிஸ் காலத்தில் இல்லாவிட்டாலும் பிளினி காலத்திலேனும் மதுரைப் பாண்டியர்கள் இப்பகுதியிலே குடியேற்ற நாடுகளைப் பெற்றிருந்தார்கள். ‘மத்தியதரை வாணிபசாலையான மதுரா (Mediterranean emporuim of Modoura) - விலிருந்து நெடுந்துரத்தில் மேற்குக் கடற்கரையின் ஒரு பகுதி அவர் காலத்தில் - அதாவது கி.பி. 77ல் பாண்டியன் (Pandion) என்ற அரசனது ஆட்சிக்குட்பட்டிருந்த்து என்று பிளினி விளக்கமாகக் கூறுகிறார். எனினும், இந்தப் பெயரும் அப்பகுதியின் அருகிலுள்ள மற்ற