பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

327 கால்டுவெல்


துப்பாக்கியைக் காத்துக் கொண்டிருந்தவர்களைத் தாக்குவதைவிடதுப் பாக்கியையே கைப்பற்றுவதில் மிக்க கவனம் செலுத்திய பாளையக்காரர் அப்பகுதியினரில் எட்டு பேர்களை மட்டும் காயப்படுத்தி விட்டுத் தங்கள் பரிசுப் பொருளைக் கரிசல்மண் பூமி அனுமதித்த வரை வெகு வேகமாகத் தள்ளிக்கொண்டு சென்றனர். அதற்குள் எங்களது துணைப் படை வந்து தோன்றவே 'டே', 'கிளாசன்' இருவரும் அவர்களுடைய படையுடன் சென்று எதிர்த்தனர். கோட்டையிலிருந்து அவர்களுடைய உதவிக்காகப் பல நூறு ஆட்கள் விரைந்து வந்த போதிலும் பொருள்களைக் கைப்பற்றிக் கொண்டு வருத்தும் எதிரிகளாகிய பிளிஸ்தியர்களின் (இஸ்ரயேலர்களைத் துன்புறுத்திய போர் விருப்பமுள்ளவர்கள்) கைகளிலிருந்து எங்களுடைய இயந்திரத் துப்பாக்கியைக் கைப்பற்றினோம். மழை நின்றதும் தொடர்ந்து சுட்டனர். எங்கள் கூடாரத்திலிருந்தும் அதே போன்ற எங்கள் படைப் பகுதியினர் அவர்களை எதிர்த்துத் தாக்குதல் செய்தனர். பொதுவாகத் தாக்குதல் தொடர்ந்தன. இறுதியில் அது பயனுள்ள விளைவின்றி முடிந்தது என்றே நான் கூறுவேன். இரு பக்கத்தினரும் அதிக ஒலமிட்டனரே தவிர ஒரு செயலையும் செம்மையாய்ச் செய்யவில்லை. ஒரு மணி நேர சண்டைக்குப்பின் இருவரும் ஒருங்கு கூடி முடிவுக்கு வந்ததுபோலத் துப்பாக்கிச் சூடுகள் நின்றன. இருதிறத்தினரும் தங்கள் இழப்புகளைக் கணக்கிடத் திரும்பினர். அவற்றில் இடர் நிறைந்த புள்ளிக்கணக்கு குண்டுகள் செறித்திருந்த உறைகளாகத்தான் இருக்க வேண்டும். (பகையாரின் நகை பாரீர் - ந.ச.)

இறுதித் தாக்குதல்

எதிர் நோக்கியிருந்த படைகளெல்லாம் மே, திங்கள் இடையில் வந்து சேர்ந்தன. படைத்தலைவன் ‘அக்னியூ' (Colonel Agnew) (ஆமாம்! நெருப்புத்தான்! தீதான்!தீயன்தான்! - ந.ச.) 21 ஆம் தேதி அன்று படைத் தலைமை ஏற்றான்.

அங்கு வந்து சேர்ந்ததிலிருந்து 24 ஆம் தேதி வரை கோட்டைச் சுவரில் பிளவு உண்டாக்க மிகப் பெரிய முயற்சிகள் எடுக்கப்பட்டன. காண்போருக்கு மிகுந்த வாய்ப்பு நலங்களோடு செயல்பட்டதாகத் தோன்றக்கூடிய விதத்தில் அன்றே அம்முயற்சி செய்து முடிக்கப்பட்டது. எனினும் எதிரிகள் பச்சை முள் மரத்தால் கோட்டைக்குச் செல்லும் எல்லா வழிகளிலும் அரணமைத்துவிட்டமையால் அவை சிறு சிறு தடைகளை அவ்வப்போது உண்டாக்கின. மே 23 ஆம் தேதி காலை, பகலவன்தோன்றும்போது கோட்டையின் தெற்மேற்குக் கொத்தளத்தின் மீது எங்களது இரண்டு பீரங்கிப் படையினர் சுடத் தொடங்கினர். எங்களது ஆரவாரிப்புக்கு ஏற்றபடி பீரங்கிப்படையினர் கொத்தளத்தில் முக்