பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 334


திட்டம் வெற்றிடைந்தது மட்டுமன்றி மற்ற பல வீரர்களின் உயிர்களையும் கிட்டத்தட்ட காப்பாற்றியது. அவர்கள் அவ்வுடலை ஒரு துணியால் மூடினர். அந்தச் சூழ்நிலைக்கேற்ற விந்தையான புலம்பலை உச்சக்குரலில் எழுப்பினர். எட்டயபுரத்து ஆட்கள் அங்கு சென்றவுடன் அக்கூக்குரலுக்குக் காரணம் வினவினர். ஓர் ஏழைச் சிறுவன் பெரியம்மையால் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு அவ்வீரர்களைத் திருப்பிக் கூடப் பார்க்கவிடாது அக்கிராமத்தை விட்டே ஓடும்படி செய்தது. அதற்குப்பின் அவன் எவ்வாறு காப்பாற்றப்பட்டான் என்பதை என்னால் அறிய இயலவில்லை. (அதுதான் வெள்ளைத் துரையே! ஊமைத்துரை! - ந.ச.) எனினும் ஜூன் திங்கள் 7, 10 ஆம் தேதிகளில் அவனே நேரில் வருகை தந்திருந்தான். அவன் வழக்கம் போல சுறுசுறுப்பாகவே இருந்தான். எங்கள் முற்றுகையின் முடிவில் அவனும் உயிரோடு பிடிக்கப்பட்டான். பாஞ்சாலங்குறிச்சிக்கு எதிரே நாங்கள் நிறுவிய துக்குமேடையில் வீரமும் ஆனால் தீவினையும் நிறைந்த அவனுடைய உறவினர்களுடன் அவனும் தூக்கிலிடப்பட்டான். (பிணம் உனக்குப் பேயே! மனம் எங்களுக்கு - ந.ச.) ஒரு காலத்தில் அச்சம் நிறைந்ததாக இருந்த கோட்டையின் எஞ்சிய நினைவாக இன்று உள்ளது, அதன் எதிரில் அமைந்துள்ள எங்களுடைய அறுநூறு தோழர்களுடைய கல்லறைகள் நீங்கலாக, அந்தத் தூக்கு மேடை ஒன்றுதான்.

பாஞ்சாலங்குறிச்சியின் மீது பலமுறை படையெடுத்த போது இறந்த பல அதிகாரிகளின் கல்லறைகளில் வரையப்பட்ட நினைவுக் குறிப்புகள் வருமாறு:-

பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து ஒரு மைல் தூரத்திலுள்ள ஒட்டப் பிடாரம்

1799 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 3 ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சியைத் தாக்கிய போது இறந்த வீரர்கள் தளபதிகள் டக்ளசு (Douglas), டார்மியக்சு (Dormieux), காலின்சு (Collnis), பிளேக் (Blake), கன்னர் பின்னி (Gunner Funny) ஆகியோர் நினைவுகளுக்காக,

பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள இடுகாட்டில்

1801 ஆம் ஆண்டு மார்ச் 31 மே 24 ஆம் தேதிகளில பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையில் நடந்த போரில் வீரப்போர் புரிந்து இறந்த வீரர்கள், போர்க் காயங்களினால் இறந்த வீரர்கள் காப்டன் ஜான் காம்பெல் (John Campbell), மாண்புமிகு அரசு அணி 74வது படையைச்