பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

335 கால்டுவெல்


சேர்ந்த தளபதிகள் ஏ. காம்பெல் (A Campbell), டி. கில்கிரைஸ்டு (D. Gilchrist), பி. ஷாங்க் (P. Shank), மாண்புமிகு அரசு அணி 77 வது படையைச் சேர்ந்த தளபதிகள் ஜே. ஸ்பெல்டிங் (J. Spalding) ஏ. காம்பெல் (A Campbell), மூன்றாவது அணியின் முதலாவது படையைச் சேர்ந்த தளபதிகள் பிரேசர் (W. Fraser), கே. மங்க்னால் (K. Mangnal), 9வது அணியின் முதல் படையைச் சேர்ந்த தளபதி சி. டொரியனா (C. Torriano) ஆகியவர்கள் புனித நினைவுகளுக்காக,

கூடுதலாக

மாண்புமிகு அரசு அணியில் 74-வது படையைச் சேர்ந்த தளபதி டக்கால்ட் டபிள்யூ. கில்கிரைஸ்ட் (Dougald W. Gilchrist) உடல் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த இளம் வீரர் 21 வயது நிரம்பாதவர். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையில் பிளவு உண்டாக்கச் செய்த முற்றுகையில் வெற்றிகிட்டும் நேரத்தில் 1801 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி கொல்லப்பட்டார். அவரது மறைவால் மாண்புமிகு அரசு அணி திறமையும் துணிவுமிக்க பெரிய அதிகாரியை இழந்து விட்டது. சமூகமோ அன்பும் ஆதரவும் நிரம்பிய ஒர் உறுப்பினரை இழந்துவிட்டது.

பாஞ்சாலங்குறிச்சிக் காப்பியம்

இறுதி முற்றுகையின் போது நடைபெற்ற நிகழ்ச்சிகள் பாஞ்சாலங்குறிச்சி சிந்து என்ற உள்நாட்டுப் பாடலுக்கான பொருளாக அமைந்தன. இதன் ஆசிரியர் நமச்சிவாயம் என்ற ஒருவர். எங்களிடமிருந்த இந்தியாவைப் பற்றிய வரலாற்றுத் தொடர்புடைய சான்றுகள் எல்லா வற்றையும் விட குறைந்த உண்மைகள் நிரம்பியவை. இந்திய அரசியல் பற்றி எழுதப்பட்ட பாடல்கள் என்று நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். இங்குக் குறிப்பிட்டுள்ள சிந்துப்பாட்டு இந்தக் கூற்றின் மெய்ம்மையை எடுத்துக் காட்டும் சிறந்த சான்றாகும். (துரையே! உன் வரலாறு குறையற்றதோ? கரைமிக்கதோ-ந.ச.) அது ஆசிரியரின் கற்பனைக்குள் நடைபெற்ற நிகழ்ச்சிகளைப் பற்றிக் கூறுகிறது. அச்சிந்து இன்றும் பாடப்பட்டு வருகிறது. சிறப்பாக இறுதிச் சிறைப் பிடிப்பு, பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை வீழ்ச்சி பற்றிய பொறுக்கத்தக்க பிழையற்ற பொதுக் கருத்துக்களை மரபுவழிச் செய்தியாயறிந்து கொண்டிருக்கும் மக்கள் முன்னிலையில் அவ்வப்போது அது நாடகமாக நடிக்கப்பட்டு வருகிறது. (பாட்டும் நாடகமும் அப்போதே - ந.ச.) எனினும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் வெட்கமற்ற முறையில் புனைந்தெழுதப்பட்டிருப்பதை நாங்கள் காண்கிறோம். (உன் வெட்கத்தை நெருப்பில் போடு- ந.ச.) திரு. கிர்ன்சு (Kearns) அப்பாட்டிலுள்ள ஒவ்வொரு சிந்து