பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இயல் - 9

பாளையக்காரர் போரின் முடிவு
கர்நாடகத்தை ஆங்கில அரசிடம்
ஒப்படைத்தல்

போர் சிவகங்கைக்கு மாறுதல்

நாம் இப்போது பாளையக்காரர் போரின் இறுதிக்கட்டம், கட்டபொம்ம நாயக்கனின் முடிவு, பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றின் இறுதி முதலியவற்றிற்கு வந்துவிட்டோம். அரசு துருப்புகளின் எல்லா முயற்சிகளையும் இதுவரை தாங்கி வந்த (பகைவர் பாராட்டே பாராட்டு !- ந.ச) கோட்டை கடைசியில் கைப்பற்றப்பட்டது. பாளையக்காரர்களும் எஞ்சிய அவர்களது தொண்டர்களும் தப்பி விட்டனர். அத்தகைய வலிமை வாய்ந்த எதிரிகள் (வலிமை இருந்து என்ன பயன்? ஒற்றுமையில்லாமல் போயிற்றே! ந.ச.) இருக்கும்வரை அமைதியை நிலை நாட்டத்தக்க நோக்கமில்லை. மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் பல்வேறு பாளையக்காரர்களால் உதவி பெற்று வாழ்ந்த போர் வீரர்களின் எண்ணிக்கை 22,000 என்றும் அவர்கள் எல்லோரும் ஒரு கண அறிவிப்பில் (அடி ஆத்தி! - ந.ச.) தங்கள் தலைவர்களைத் தொடர்ந்து எந்தத் தாக்குதலுக்கும் புறப்படத் தயாரென்பதையும் திரு. லூஷிங்டன் மதிப்பிட்டிருந்தார். பயிற்சி பெற்ற 20,000 பாஞ்சாலங்குறிச்சி வீரர்களை எதிர்க்க முடியாது என்பது படைத்தலைவர் எவல்ஷின் மதிப்பீடு. அத்தகைய வீரர்களின் பெரும்பகுதி, பாளையக்காரன் (கட்டபொம்மன் - ந.ச.) அவனது ஊமை உடன்பிறந்தான் உள்பட யாவரும் கோட்டை கைப்பற்றப்பட்டவுடன் வடக்கே சிவகங்கையை நோக்கித் தப்பி விட்டதையும் நாம் கண்டோம். சிவகங்கை உரிமையைக் கைப்பற்றிய பாளையக்காரர்கள் அவர்களை முழுமனதுடன் இரு கை நீட்டி வரவேற்றனர். (கால்டுவெல் தரும் நற்சான்று - ந.ச.) அதற்குப் பின் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் திருநெல்வேலி வரலாற்றைவிட மதுரை வரலாற்றையே சேர்ந்தது என்று கூடக் கூறலாம். ஆனால் சிவகங்கை நாட்டில்