பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

339 கால்டுவெல்


நடந்த போரைத் தொடர்ந்து கூறாவிடில், திருநெல்வேலியின் இந்த வரலாற்றுத் தொடர்பு பற்றிய செய்திகளைக் கூறுவதில் நேர்மையைக் கடைப் பிடித்தல் இயலாத செயலாகும். (வெள்ளை வரலாற்றாசிரியனுக்கும் இருந்த நேர்மை பாரீர்! - ந.ச.) மேலும் சிவகங்கையும், இராமநாதபுரமும் அக்காலத்தில் திருநெல்வேலியுடன் சேர்ந்திருந்தன (வாதத்திறமும் காணிர்! - ந.ச.) அன்றியும் அவை தென்பாளையக்காரப் பகுதியின் வரி வசூல் அலுவலராக இருந்த திரு. லூஷிங்டனின் ஆணைக்கு உட்பட்டிருந்தன.

பாஞ்சாலங்குறிச்சியைக் கைப்பற்றிய ஐந்து நாட்களுக்குப் பின் அதாவது மே மாதம் 28ஆம் தேதி முழுப்படையும் நாகலாபுரத்தில் முகாமிட்டது. அங்கிருந்து படையின் ஒரு பகுதி கமுதி எனப்படும் கொமரிக்கு (கொச்சை ஆங்கிலத்தில் - ந.ச.) அனுப்பப்பட்டது. ஆர்மன்ஸ் தரைப்படத்தில், கமுதி ஒரு சிறிய ஆனால் கல்லால் கட்டப்பட்ட கோட்டை. இது இராமநாதபுரத்தைச் சேர்ந்தது. இதை எதிரிகள் முற்றுகையிட்டுக் கொண்டிருந்தனர். இது முடிந்ததும் இதன் சுற்றுப் புறத்தில் எதிரிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ஒரு படைநிறுத்தப்பட்டது.

ஜூன் இரண்டாம் தேதி படைகள் சிவகங்கை நாட்டிலுள்ள திருபுவனத்தை அடைந்தன. இங்குதான் எதிரிகள் முதலில் காணப்பட்டனர். அன்றிலிருந்து ஜூலை 14 ஆம் தேதி வரை படைகள் இராமநாதபுரத்திற்குப் படையெடுத்துச் சென்றபோது, அவர்கள் அந்த வழிகளில் தொடர்ந்து எதிரிகளின் தாக்குதலுக்கு உட்பட்டனர். அப்பொழுது நாடு காடாக இருந்தமையால் அதைக் கடப்பது கடினமாயிருந்தது. தங்கள் வழியிலே இரண்டு இடங்களில் எதிரிகளை மிக முயற்சியோடு (உம்!-ந.ச.) வெற்றிகண்டு கடந்து செல்ல வேண்டியதாயிற்று. இதனால் ஐரோப்பியர்கள் உட்படக் குறிப்பிடத்தக்க இழப்பு அவர்களுக்கு ஏற்பட்டது. இராமநாதபுரத்தில் படைத்தலைவன் மார்ட்டினிடமிருந்து தேவையான செய்திகளைத் திரட்டிக் கொள்ளும் வாய்ப்பு படைத்தலைவன் அக்னியூவுக்குக் கிடைத்தது. படைத்தலைவன் மார்ட்டின் போர்ச்சுக்கீசிய ஐரோப்பியன். அவனது பணியின் தொடக்கக் காலத்தில் பல பாளையக்காரர்களின் செயல்களைக் கண்டிருக்கிறான். எனினும், இங்குதான் அரணால் சூழப்பட்ட காளையார்கோவில் கண்டு பிடிக்கப்பட்டது. மருதுகள் இங்குதான் திரும்பி வருவார்களெனவும் எதிர்பார்க்கப்பட்டது. அக்கோட்டையின் தற்காப்பு நிலையைக் காணும்போது பாஞ்சாலங்குறிச்சி நிகழ்ச்சிகள் திரும்பவும் நடைபெறக் கூடுமெனத் தோன்றியது. அந்த இடத்தைச் சேர கிழக்குத் திசையாகச் செல்ல எடுத்துக் கொள்ளவேண்டிய முயற்சிகளும்