பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 26


கி.பி.800 ல் ஜியார்ஜியஸ் சிஸ்செல்ஸ் (Georgius Syncellus) என்பவரால் எழுதப்பட்ட புத்தகங்களில் இருப்பது தெரிகிறது. அவர் நூற்றெண்பத்தைந்தாவது ஒலிம்பிய விளையாட்டுகள் என்ற தலைப்பில் பின்வருமாறு எழுதியுள்ளார்:

“இந்தியர்களின் அரசனாகிய பாண்டியன் அகஸ்தஸிடம்
அவனுக்கு நண்பனும் கூட்டாளியும் ஆவதற்கு விரும்பி அரச
தூதரை அனுப்பினான்”

என்னும் இந்தச் செய்தியானது பாண்டியர்களுடைய சமுதாய அரசியல் முன்னேற்றத்தையும் அது அடைந்திருந்த உன்னத நிலையையும் காட்டுகிறது. சிறப்பாக இது கொற்கையிலும் முத்துக்குளித்தல் சம்பந்தமாக மலையாளக் கடற்கரையில் நடைபெற்ற அயல்நாட்டு வாணிகத் தொடர்பையும் விளக்க வல்ல சான்றாயுள்ளது. அலெக்சாண்டரின் ഖழி வந்தோருக்கும் வடவிந்திய அரசர்களுக்குமிடையே நிலைத்திருந்த அரசியல் உறவானது முடிந்தபின் ஐரோப்பியர்களுடைய கூட்டுறவின் பயன்களை உணர்ந்தவர்கள் இந்திய இளவரசர்களாகிய பாண்டியர்களே ஆவார்கள்.

கொற்கையைப் பற்றிக் கிரேக்கர்கள் கூறும் செய்திகள்

நம் நாட்டு எழுத்தாளர்கள் வணிகர்கள் முதலியவர்களிடமிருந்து தெரிவதை விட மிகுதியாகக் கொற்கையைப் பற்றிய செய்திகள் கிரேக்கர்களிடமிருந்து கிடைக்கின்றன. சுமார் கி.பி.80ல் இந்தியாவிற்கு வந்த கிரேக்க அறிஞனும், எரித்திரேயன் அல்லது செங்கடலைச் சுற்றி மரக்கலத்தில் வந்தவனுமாகிய (இதனால் செங்கடலின் வாயிலிருந்து வங்காளக் குடாக்கடல் வரையுள்ள அரபிக்கடல் முழுவதும் தெரிய வந்தது) பெரிப்புளூஸ் மாரிஸ் எரித்தரேஸ் (Periplus Maris Erigthrace) என்பவர் கொற்கையைப் பற்றி எழுதியுள்ளார். கி.பி. 130ல் வாழ்ந்த நிலநூல் அறிஞரான தாலமியும் அதைப் பற்றிக் கூறியுள்ளார். இவர்களால் கொற்கை, வணிக நிலையம் என்று வழங்கப்பட்டது. பெண்டிங்கரால் கண்டுபிடிக்கப்பட்ட பழைய நிலப்படங்களில் (maps) இந்தியாவிலுள்ள சில இடங்களுள் இதுவும் ஒன்றாகும். இந்நிலப் படங்கள் எழுதப்பட்ட காலம் இன்னதென்பது தெரியவில்லை. ஆசியப் பகுதிகளைக் கூர்ந்து நோக்குங்கால் இதன் ஆசிரியர் தாலமியுடன் பழகியவரென்பது தெரியவில்லை. ஆகையால், அவர் தாலமிக்கு முந்திய காலத்தினராய் இருக்கலாம். ஐரோப்பியப் பகுதிகளைச் சேர்ந்த சில இடங்கள் பிற்காலத்தவையாய் இருக்கின்றன. பெரிப்புளூசின் ஆசிரியரும் தாலமியும் பாண்டி நாட்டில் அக்காலத்தில் முத்துக்