பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 344

 பட்டனரே தவிர தேவர்கள் என்றோ பாளையக்காரர்கள் என்றே குறிப்பிடப்படுவதில்லை.

மருது என்று ஆங்கிலேயரால் எழுதப்பட்ட அப்பெயர் அவர்களின் குடும்பப் பெயரே அன்றி தனிப்பட்ட பெயரில்லை. மருது என்பது ஒரு மரம் (டெர்மாலியா அலாடா), ஒரு மரத்தின் பெயர் எப்படி ஒரு குடும்பத்தின் பெயராயிற்று? இராமநாதபுரம் ஜமீந்தாரியிலுள்ள நயினார் கோயிலில் உள்ள சிவன், மருத மரத்தடியில் இலிங்க வடிகமாகத் தோன்றினார் என்று கருதப்படுகிறது. எனவே அந்த இடத்திலேயே அவர் வணங்கப்படுவதால் அவர் மருதப்பா அல்லது மருதீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். சிறுவயல் மக்களுக்கு இது குடும்ப தெய்வமாதலின் அத்தெய்வத்தின் நினைவாக ஒவ்வொரு குடும்பத்தினரும் மருது என்ற பெயரை வைத்துக் கொண்டனர். சேர்வைக்காரன் என்பது சாதிப்பெயர். மருது என்பது குடும்பப் பெயர். இரண்டு தலைவர்களும் மருது என்ற பெயரையே பெற்றிருந்தனர். மூத்தவர் பெரியமருது; இளையவர் சின்னமருது என்பதே அவர்களிடையே இருந்த ஒரே வேறுபாடு. பெரியமருது நாட்டை ஆளுபவர். சேர்வைக்கார் என்றோ மருது என்றோ குறிப்பிடும் போது அது பெரிய மருதுவையே குறிக்கும். ஆனால் சின்னமருதுவே உண்மையில் நாட்டை ஆளுபவர். பெரியமருது அரசாட்சியை இளைய மருதுவிடம் விட்டு விட்டு வீரவிளையாட்டுகளில் முழுதும் ஈடுபட்டிருந்தார். இங்கு அந்த இரு உடன்பிறந்தவர்களைப் பற்றி வெல்ஷ் பெருமையாக விளக்குவதைக் கூறும் சூழ்நிலையை என்னால் தவிர்க்க இயலவில்லை. அவர்களை வெல்ஷ் அறிந்து அவரது அன்பைப் பாராட்டிய போதிலும் அவரது குடும்ப வரலாற்றைப் பற்றி ஒன்றும் அறியவில்லை என்று தெரிகிறது.

அடிக்கடி குறிக்கப்படும் இரண்டு உடன்பிறந்தவர்களில் மூத்தவன் வெள்ளைமருது என்றழைக்கப்பட்டான். ஆனால் அவனுக்கு நாட்டின் ஆட்சியைப் பொறுத்தவரை ஒன்றும் பொறுப்பில்லை. அவன் ஒரு விளையாட்டு வீரன். வேட்டையாடுவதிலும், துப்பாக்கி சுடுவதிலும், தன்னுடைய முழு காலத்தையும் செலவிட்டு வந்தான். இயல்புக்கு மாறான ஆள் அளவும் வலிமையும் பெற்றவனாதலின் காட்டு விலங்குகளைத் தாக்குவதையே முதன்மையான கேளிக்கையாகக் கொண்டிருந்தான். மேலும் அவன் தன் விரல்களின் உதவியாலேயே சாதாரண ஆர்க்காட்டு ரூபாயை வளைக்கக்கூடிய திறனுடையவன் என்று சொல்லப்படுகிறது. அரசாங்கக் கவனிப்பு, ஆட்சிப் பிணைப்பு இவற்றால் தொல்லையுறாத அவன் அலைந்து திரியும் வாழ்க்கை நடத்தி வந்தான். அவ்வப்போது தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை