பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 348


அவனுக்கு, லூஷிங்டன் கேட்ட அத்தகைய ஆவணங்கள் கிடையாது என்பதும், அத்தகைய சான்றுகளைக் காட்ட இயலாது என்பதும் நன்கு தெரிந்திருந்தும் ஆவணங்களைக் காண்பிப்பதாக உறுதி கூறினான். லூஷிங்டனின் இந்தக் கோரிக்கையே அவனுக்கு இடையூறு அண்மையில் இருக்கிறது என்பதை உணர்த்தப் போதுமானதாக இருந்தது. எத்தகைய துணிவும் தகைமையும் அந்த இடையூற்றைப் போக்க வல்லமையற்றது என்ற முடிவுக்கு அவன் வந்திருக்க வேண்டும். எனவே வீரத்துடன், வரும் வினையை வரவேற்க வேண்டும் என்ற சிறந்த கொள்கையைக் கடைப்பிடித்தான். தோற்கடிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரனை அவன் அணைத்து ஆதரிக்கவும் இறுதி வரை திண்மையுடன் போரிடுவதற்கும் இதுவே காரணமாகும். அவன் மேற்கொண்ட பல வழிகளில் ஒன்று அவன் மதராசு அரசுக்கு லூஷிங்டனுக்கு எதிராக எழுதிய கடிதமாகும். அதில் நாட்டில் ஏற்படும் குழப்பங்களுக்குக் காரணம் லூஷிங்டனே என்றும் உடனே அவனை மாற்றி அவனுடைய இடத்தில் சிறந்த வேறொரு கலெக்டரை நியமிக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தான்.

மருதுவின் தலைநகரையும் கோட்டையையும் நோக்கிப் படையெடுக்கும் எண்ணத்துடன் இராமநாதபுரத்தை விட்டு ஆங்கிலப்படை சென்றதும் இராமநாதபுரத்திற்கு ஒரு படையை அனுப்பக்கூடிய வாய்ப்பைப் பெற்றான் மருது, அப்படை வட இராமநாதபுரம் தாலுக்காக்களைக் கைப்பற்றி, முற்றுகையிட்டு, இராமநாதபுரத்தையும் கூட அச்சமூட்டிக் கொண்டிருந்தது. கைப்பற்றிய தாலுக்காக்களை முற்றுகை முடியும் வரை தன்னிடத்தில் வைத்திருப்பது நன்மையுடையது என லூஷிங்டன் எண்ணினான். கமுதிக்கோட்டையை ஆங்கிலப்படை சூழ்ந்து மிகவேக மாய்த் தாக்கியும் எண்ணிப்பார்க்க இயலாத முறையில் அக்கோட்டைத் தாக்குதலை எதிர்த்துப் பாதுகாத்து நின்றனர். படைத்தலைவன் மார்ட்டினின் இராமநாதபுரப் படையின் ஒரு குழுவினர் தங்கியிருந்த திருப்பத்தூர் கோட்டை மருதுக்களால் வெற்றி முழக்கத்துடன் கைப்பற்றப்பட்டது

இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தொண்டித் துறைமுகம் அல்லது பால்க் நீர் இணைப்பில் சிறிய அளவில் கடற்போர் நடந்து கொண்டிருந்தது. சிவகங்கை ஜமீன்தாரி முழுவதும் உள்நாட்டிலேயே அமைந்திருந்ததால் எல்லைகள் பிரிக்கப்பட்டபோது சிவகங்கைக்கு அதன் கடல் வாணிபத்தின் வாய்ப்புக்கான வெளித்துறைமுகம் ஒன்று கொடுக்கப்பட வேண்டுமென்பதைச் சேனாபதி ஏற்றுக் கொண்டிருந்தார். இது தொண்டியின் துறைமுகப் பட்டினம்; இதைத்