பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 350

 மரங்கள் நிறைந்த புதர்களும் அமைந்திருந்தன. இவை யாவும் பாளையக்காரனின் ஒழுங்கற்ற போருக்கு மறைவிடமாக உதவியது. எதிரிகள் அதிகமாகப் போர்க்கருவிகளை வைத்திருந்தனர். அவர்களுக்கே உரித்தான விவரங்களுள்ள சிறு துப்பாக்கிகள் பலவற்றைப் பெற்றிருந்தனர். எதிரிகள் பக்கத்திலிருந்து இடைவிடாது நாள் முழுவதும் சுடுதல் நடைபெற்றது. தொலைநோக்குடையவன் நாங்கள் நெருக்கடியான நிலையிலிருப்பதாக முடிவு செய்யக்கூடிய சூழ்நிலை இருந்தது எனினும் நல்வாய்ப்பாக அது வெறும் கூச்சலும் ஒழுங்கற்ற துப்பாக்கிச் சூடுகளுமே தவிர வேறு எந்தவிதமான அச்சமூட்டத்தக்க கெடுதலையும் செய்யவில்லை. பாளையக்காரர்கள் எங்கள் எதிரிலும் நீர் நிலைக் கரைகளிலும் கூட்டமாக இருந்தபோதெல்லாம் அவ்வப்போது நாங்கள் பீரங்கியைப் பயன்படுத்தினோம். எங்களுடைய படை அவர்களை நெருங்கும்போதெல்லாம் அவர்கள் மற்ற முனைக்குப் பின் வாங்கினர். எங்கள் முக்கியப் படைக்கு வடக்கே இடது பக்கத்தில் எதிரிகளின் முக்கிய மறைவிடம் இருந்தது போல் தோன்றியது. ஆதலின் இந்தப் பக்கத்தில் மேஜர் ஷெப்பர்ட், தன்னுடைய படையுடன் நிலையான துணைப்படையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தான். எங்களுடைய படைக்கருவிகளும், சேமிப்புகளும் மிக அதிகமாக இருந்தமையால் துணிவாண்மையுள்ள எதிரியாக மட்டும் அவர்கள் இருந்திருப்பின் அவர்களுக்கு அவை கவர்ச்சியை உண்டுபண்ணியிருக்கும். அந்திப் பொழுதில் எங்கள் முற்றுகையிடத்தை அடைந்தோம். அங்கு சிறுவயல் பெருநகரம் பெருந்தீக்கிரையாகிக் கொண்டிருந்ததைக் கண்டோம்.

காளையார் கோவிலுக்குக் காட்டில் ஒரு வழி

சிறுவயல் மக்கள் அவரவர்களுடைய வீடுகளுக்கு அவரவர்கள் கையாலேயே நெருப்பு வைத்துவிட்டுக் காடுகளுக்குத் தப்பி ஓடி விட்டனர். (என்னே அவர்கள் நாட்டுப்பற்று! - ந.ச.) பெருங்காற்றால் விசிறப்பெற்ற தீ, கொடுமையாகத் தாவி அகலமும் ஒழுங்கும் உடைய தெருக்கள் அமைந்த அழகு நிறைந்த பரந்த கிராமம் (நகரமைப்பிலும் வல்லவர் நம் முன்னோர்! - ந.ச.) முழுவதும் பரவிற்று. மருதுக்களின் அரண்மனை எவ்வித எதிர்ப்புமின்றி எங்கள் துருப்புக்கள் வசமாயின. இது ஜூலை 30 ஆம் தேதி நடைபெற்றது. அடுத்த நாள், கர்நாடகத்திலேயே அடர்வு மிகுந்து (அடி ஆத்தே! - ந.ச.) அணுக இயலாத காடாகிய காளையார்கோயில் (இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்த பழைய பெயர்; கானப்பேர் எயில்) காட்டினுடே வழி உண்டாக்கும் வேலையைப் படைகள் ஆரம்பித்தனர்.

பாளையக்காரர்கள் தங்கள் பகைவர்களை எதிர்க்குங்காலங்களில்