பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

351 கால்டுவெல்

 தங்கள் கோட்டைகளைச் சுற்றி வலிமையான வகைவகையான அரண்களை மிகத் திறம்படக் கட்டியிருப்பார்கள் என்பது யாவருமறிந்த உண்மை. அன்றியும் அந்த நிலையில் அப்படிப்பட்ட இடங்களை எதிர்ப்பது ஆங்கிலேயருக்கு அளவுமீறி அதிக இழப்பை அளிக்கும். ஆகையால் அத்தகைய வேலைகளை எதிர்த்துத் தாக்குவதைவிட காளையார் கோயிலுக்கு ஒரு புதிய வழியை ஏற்படுத்துவதே சிறந்த முறை என்ற கிளர்ச்சி நிரம்பிய ஒரு நம்பிக்கையே கர்னல் அக்னியூ விற்கு மகிழ்வூட்டியது. காட்டினூடே சாலை அமைப்பது மிகக் கடினமானத் தொடர் வேலையாக இருந்தபோதிலும், அவ்வேலை போதுமான கவனிப்புடன் தொடங்கப்பட்டது. எங்கள் படை வீட்டிற்கு எதிரே அமைந்த காட்டின் எல்லையிலிருந்து காளையார் கோயில் கோட்டை வரை சாலையிடத் திட்டமிட்ட தூரம் ஐந்து அல்லது ஆறு மைல்களுக்குக் குறையாமலிருந்தது. இவ்வேலையின் பெரும்பகுதி செய்து முடிக்கப்படும்போது எங்கள் ஆட்களிடையே நோய் பரவிற்று. செய்து முடிக்க வேண்டிய இவ்வேலையின் பெரும்பகுதி நிறைவேறாமல் இருந்தது. ஏனெனில் அவர்கள் தப்பிச் செல்லச் செல்ல ஒவ்வொரு நாள் காலையிலும் திறந்த வெளியிலோ அல்லது அவர்களே அமைத்துக் கொண்ட பாதைகளிலோ வெளிப்பட்டுக் காளையார்கோயிலுக்கு வழி போட்டு முடிக்கும் வேலைகளைப் பின்தொடர்ந்து முன்னேறி வந்ததால் சிறிது காலம் வரை பகைவர்கள் பாதுகாப்பான இடங்களிலிருந்து கொண்டு எங்கள் கூட்டத்தினருக்குப் பல தொல்லைகள் நிரம்பிய எதிர்ப்பை உண்டாக்க எண்ணவில்லை.

ஒவ்வொரு நாளும் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றியும் ஒரு நாட்குறிப்பை ஜெனரல் வெல்ஷ் எழுதியுள்ளார்; (கர்னல் வெல்ஷ் பற்றி என்னுடைய ‘மருதிருவர்’, ‘மருதுபாண்டியர்’ நூல்களைப் பார்க்க. - ந.ச.) தொடர்ந்து நான்கு நாட்களாக எரியும் காட்டினூடே வழி உண்டாக்கும் பணி பற்றிய கீழ்க்காணும் செய்திக் குறிப்புகள், நாங்கள் மேற்கொண்ட பணியின் தன்மைகள், அதிலுள்ள தொல்லைகள் பற்றி தெளிவான கருத்தை விளக்கும்.

ஆகஸ்டு 6. வேலை செய்து கொண்டிருந்த எங்களைத் தொடர்ந்து வந்த படைப்பகுதிக்கு மேஜர் கிரஹம் (Major Graham) தலைமை வகித்தான். அவன் முந்திய நாள் வெட்டப்பட்ட பாதையின் முடிவில் பெரிய மண்குவியல்களை அள்ளி எறிந்து உண்டாக்கப்பட்ட கரையைக் கண்டான். ஒரு பெரும் படையே அதன் மறைவிலே தங்கக் கூடிய அளவு பெரிதாக அக்கரை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு மூன்று தனித்தனி வேலிகளும் போடப்பட்டிருந்தன. வேலிகளிலிருந்து வந்த