பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 356


காலத்திற்கு ஏற்பவும் அவனை ஏற்றுக் கொள்வதில் அவனைச் சார்ந்தோர் காட்டிய முழு விருப்பதின் அடிப்படையில் முடிவு எடுத்தனர். பொதுவாக அவனுடைய உயர்வு உயர்ந்த மனநிறைவுடன் இருந்த மக் களின் ஆதரவினாலேயே அமைந்தது. (அதுவே உண்மை! இப்படி-இந் நிலையிலேனும் உண்மை சொன்ன அயலவர்க்கு நம் நன்றி! - ந.ச.)

நேரடி வாரிசு இல்லாத இடத்தில் இத்தகைய உயர்நிலை பெற்றவர்கள் தண்டல்காரத் தேர்வு வாரிசு என்று லூஷிங்டனால் அழைக்கப் பட்டார்கள். கடைசி பாளையக்காரரால் அவனுடைய குழந்தை பரு வத்தில் தத்துப் பிள்ளையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட காரணத்தினாலேயே அவன் உரிமைகள் அமைந்துவிடாது. இவனைவிட இன்னும் நெருங்கிய ஒரு தண்டல்காரத் தேர்வு வாரிசு ஒருவனைப் அவன் வெள்ளை மருதுவின் மகளைத் திருமணம் செய்து கொண்டு அவனுடைய குறிக்கோளில், பற்றுடையவனாய் இருந்தான் என்பதற்காக, லூஷிங்டன் அவனைப் பாளையக்கார வாரிசாக ஏற்க மறுத்துவிட்டான். இந்தப் புது ஜமீன்தார் பெர்மாத்தூர் உடையத்தேவர் (சரியாக பவுரவல்லப கெளர வல்லப என்னும் படமாத்தூர் உடையத் தேவர்) என்றும் அழைக்கப் பட்டார். நியமித்தபோதே பாளையக்காரனாக நியமிக்காமல் ஜமீந் தாராகவே நியமித்தனர். இந்தச் செயலில், மற்றொரு இடத்தில் காட்டியது போல, பெயரிலுள்ள வேறுபாடே ஒரு உண்மை வேற்றுமையைக் குறிப் பதாயிருக்கிறது. படைத்தலைவர் வெல்ஷ், உடையதேவனுடைய நிறு வனத்தைப் பற்றி கிளர்ச்சிப் பொருந்திய குறிப்பினைத் தருகிறார். உடனடியாக மருதுக்களிடமிருந்து அதிக எண்ணிக்கையுள்ள வீரர் களைப் பிரித்துவிட்டஇச்செயலின் பயன், லூவிங்டன் தனது கொள்கையை வெற்றியுடன்நிறுவிய அறிவாற்றலை எடுத்துக் காட்டியது. அவன், அத் தகைய சிவகங்கை ஜமீன்தார் போன்ற வாரிசு உரிமையாகிய உயர்ந்த பெருமையை ஒரு தகாமுறை அரசனுடைய கைகளில் விட்டு வைக்க விரும்பவில்லை. எனினும் இன்றோ அல்லது என்றோ அவன் விரும்பிய அவ்வாறே செய்து முடிக்கத்தக்க ஒரு நடவடிக்கையாக அது இருந்தது.

இந்தச் சூழலில் படைப்பகுதித் தலைவன் அக்னியூ குதிரைப் படையுடன், சில உள்நாட்டுச் செய்திகளைச் சேர்த்துக் கொண்டு இரவில் புறப்பட்டு பேரமல்லியைப் (பிரான்மலை! - ந.ச.) பிடிக்கச் சென்றான். அது எதிர்பாராதத் தாக்குதலாகலின் அதனால் ஏற்பட்ட வியப்பு விலகுமுன் எவ்வித குறிப்பிடத்தக்க நடவடிக்கையும் இல்லாத படி கோட்டை கையகப்பட்டது. இந்தத் தாக்குதல், உத்தியுடன் சேர்ந்து திட்டமிடப்பட்ட ஒன்று. ஏனெனில் காவல்படைஏதோ சில மறைவான