பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

359 கால்டுவெல்


அந்த வேலை முடிவு பெற்றது என்ற எண்ணமே அம்மகிழ்ச்சிக்குக் காரணமாகும்.

மேலும் வெல்ஷ் கூறுவதாவது: "காளையார் கோயில் பெரியது. அழகிய கட்டட அமைப்புள்ளது. ஏறக்குறைய 18 அடி உயரமுள்ள வலிமை வாய்ந்த கல்சுவரர்ல் சூழப்பட்டிருந்தது. ஏறத்தாழ அழிக்கப் பட்ட நிலையிலுள்ள கோட்டையின் ஒரு பகுதியை உடையது அச்சுவர். நாங்கள் ஒரே சமயத்தில் பல வழிகளிலும் தாக்குதல் செய்தமையால் எங்கள் எதிரிகள் மனம் தளர்ந்தனர். அன்று எஞ்சிய நேரத்தில் ஒருவரும் அங்கே காணப்படவில்லை. நாங்கள் இங்கு 21 துப்பாக்கிகள் - அவற்றில் பல அரணில் அமைக்கப்பட்டவை, ஏராளமான சேமிப்புகள் ஆகிய வற்றைக் கண்டோம். அங்கு ஐரோப்பிய மரச்சாமான்கள் பல இருந்தன. அவற்றுள், இரண்டு கடிகாரங்களும் பல பெரிய சுவர்க் கண்ணாடிகளும் இருந்தன. கோட்டை வலுவுள்ளதாய்க் கட்டப்பட்டிருந்தது. அதிக பரப் பளவுடையது. ஆனால் நகரமோ ஒர் அடர்ந்த வேலியால் சூழப் பட்டிருந்தது. இந்நகரம் கோட்டையில் ஒரு முகமாக அமைக்கப் பட்டிருந்தது. அதில் பல அழகான வீடுகள் இருந்தன. அந்த இடம் ஒரு நாளும் மிகப் பலம் வாய்ந்ததாக இருந்ததில்லை. ஆனால் அந்த ஊரில் கிடைத்த செய்திகளெல்லாம் நம்பத் தகுந்தவையாயில்லை. படைக் கூடாரத்தில் இருந்த எந்த ஆங்கிலேயனுக்கும் நாட்டின் நிலையைப் பற்றி ஒன்றும் தெரியாது. சில மாதங்களுக்கு முன்கூட இதன் வழியாகச் சென்றேன். வெள்ளை மருதுவால் அவனுடைய இடமாகிய சிறுவயலில் அவனது விருந்தினனாக உபசரிக்கப்பட்டேன் என்பதை நாணத்துடன் தெரிவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. (அந்தோ! - ந.ச.) ஆனால் அன்று, அதே இடத்தில் ஒரு பகைவனைவிட இழிந்த நிலையில் (உ.ம்: - ந.ச.) மறுபடியும் நான் நுழைவேன் என்ற எண்ணம் எனக்குச் சிறிதும் இருக்கவில்லை.” (என்ன செய்வது! தமிழர் ஒரு தற்கொலைப் பட்டாளம் - டாக்டர் மு.வ.)

காளையார் கோயில் கைப்பற்றப்பட்ட பின் நடைபெற்ற நிகழ்ச்சிகள்

ஆயிரத்துத் தொண்ணுற்று ஓராம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி காளையார் கோயில் கைப்பற்றப்பட்டது.

அன்றிலிருந்து எதிரிகள் நம்பிக்கையை இழந்து போர்க் களத்தில் எல்லா எதிர்ப்புகளையும் கைவிட்டனர். தப்பியோடியவர்களை விரட்டி வேட்டையாடிய விவரங்களை வெல்ஷ் தருகிறார்.

மூன்றாம் தேதி அன்று மங்கலத்தில் ஒரு பெரிய பகைவர் படையைச்சந்திக்கக் காளையார் கோயில் வழியாக மங்கலத்திற்குச் செல்-