பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 360


வதற்கு வேண்டிய கட்டளைகளுடன் படைப்பகுதித் தலைவன் ஷெப்பர்ட் தலைமையில் ஒரு படை, பகலவன் தோற்றத்தின் போது கூடாரத்திலிருந்து கிளம்பியது.

நாங்கள் எவ்வித எதிர்ப்புமின்றி மதியம் இரண்டரை மணிக்கு அங்கு சென்று அக்கிராமத்திற்குப் பின்புறத்தில் பாசறைகளை அமைத்தோம்.

பாசறைக்கு எதிரில் பெரிய நீர்த்தேக்கம் இருந்தது. அதன் கரையில் காவலாளிகளை நிற்க வைத்தோம். எங்கள் அருகே வெள்ளைக் கொடியைக் கண்ட கிராம மக்கள் எங்களைக் காண வெளியே வந்தனர். மருது இரண்டாயிரம் ஆட்களுடன் சிறிது முன்வரை அங்கிருந்ததாகவும், ஆனால் பின்னர் காட்டிற்குள் புகுந்துவிட்டதாகவும் அம்மக்கள் கூறினர்.

மாலையில் ஒன்பது கிராமங்களிலிருந்து கிராமத் தலைவர்கள் படைப்பகுதித் தலைவன் ஷெப்பர்டிடமிருந்து நிலவாரக் குத்தகைப் பெற்றுக் கொள்ள ஆவலுடன் வந்தனர்.

காளையார் கோயிலிருந்து இந்த இடம்வரை இருந்த சாலை முழுவதும் காட்டினூடே அமைந்திருந்தது. (பார்க்க: படம் மருதிருவர் ந.ச.) சில இடங்களில் காடு அடர்த்தியாகவும் இருந்தது. வண்டிகள் செல்லப் போதுமானதாக இல்லாவிடினும் அப்பாதையில் அவ்வப்போது அமைக்கப்பட்ட நொய்மையான முள்வேலிகளை அகற்றிவிட்டால், மற் றெல்லா விதங்களிலும் சிறந்த வழியாகவே இருந்திருக்கும்.

காட்டின் எல்லைப்புறத்தில் ஒரே ஒரு வேலி மட்டும் இருந்தது. அது மங்கலத்திலிருந்து சுமார் ஆறு பர்லாங்கு இருக்கும். இராமநாத புரத்திலிருந்து வரும் எதிர்ப்பைத் தடுப்பதற்காகவே இவ்வேலி இடப்பட்டது.

எங்கள் வழியைச் செப்பனிடுவோர் ஏறக்குறைய இரண்டு மணி நேரத்தில் அவ்வேலியை அழித்தனர்.

பின்னர் துணையுடன் காளையார் கோயிலுக்குத் திரும்பினர். படைத்தலைவன் அக்னியூ அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி சென்னை திரும்பிவிட்டதால் நாங்கள் மறுபடியும் மேஜர் காலின் மெக்காலே தலைமையில் விடப்பட்டோம்.

ஆனால் அக்னியூவிடமிருந்து செய்தி வரும்வரைச் செயலின்றி வறிதே காலத்தைப் போக்கினோம். ஐம்பது கிராமங்களிலிருந்து தலை-