பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

363 கால்டுவெல்


கோட்டை நம் கலைஞர் - முன்னாள் தமிழக முதல்வர் - முயற்சியால் மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது போற்றத்தக்கது. - ந.ச.)

படைப்பகுதித் தலைவன் அக்னியூ இல்லாதபோதும் அந்த ஆண்டு இறுதிவரையிலும் கலெக்டராகிய லூஷிங்டன் மிக்க விடா முயற்சியுடனும் விழிப்புடனும் எதிரிகளைத் தேடிப் பிடித்து அவர் களுடைய நண்பர்களையும் உதவியாளர்களையும் கண்டு பிடித்து அடக்கினார் . இதனால் சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி முதலிய இடங்களிலுள்ளவர்களுக்குப் பாதுகாப்பும் தன்னம்பிக்கையும் ஏற்பட்டன. பின்னர் பிடிபட்ட முக்கிய கலகக்காரன் சிவத்தையா நாயக்கன். இவன் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பி வந்தபோதிலும் இவனே கலகத்திற்கு உண்மையான மூலக்காரணன் என்று பலர் எண்ணினர்.

நவாபிடமிருந்து கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஆட்சி மாறியபோது எல்லாருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்தக் குற்ற மன்னிப்பிலிருந்து இருவர் விலக்களிக்கப்பட்டனர்.

ஒருவர் சிவத்தையா நாயக்கன். அவர் ரீவில்லிப்புத்துர் அருகே கைது செய்யப்பட்டு பலத்த இராணுவப் பாதுகாப்புடன் பாளையங் கோட்டை கோட்டைக்கு கொண்டுவரப்பட்டார்.

மன்னிப்பின்றி விலக்கப்பட்ட மற்றொருவர் குலசேகரப் பட்டினத்தைச் சேர்ந்த மூப்பன். இவ்விருவரும் கைது செய்யப் பட்டார்கள்.

(இவர்களைப் பற்றிய செய்திகள் கொண்ட ஏடுகள் எல்லாம் நம் ஆவணக் களரியில் இருக்கின்றனவோ? எரிந்தனவோ? ஒருபுறம் கோட்டை கட்டி இன்னொரு புறம் கோட்டை விட்டோமோ? - ந.ச.)

மற்றொருவர் தளவாய்ப்பிள்ளை. இவர் அதிகாரிகளை அலைக் கழித்துத் தன்னை விரட்டி வருமாறு செய்து இறுதியில் கைதானார்.

நான்கு நேரி மறவர்கள் தளவாய்ப்பிள்ளைக்கு ஆதரவு காட்டி அவன் பொருட்டும் அவர்கள் பொருட்டும் சிறிது கலகமும் செய்தனர். அதனால் அவர்களை அடக்க நூறு சிப்பாய்களையும் அடக்கிய பின்னர் பணியச் செய்யப் படை ஒன்றையும் அனுப்ப வேண்டிய தேவை ஏற்ப்பட்டது. இத்தகைய சிறுசிறு கலகக்காரர்கள் இராமநாதபுரம் நாட்டிலுள்ள கமுதிக் கோட்டைக்கு அனுப்பப்பட்டு அங்கு காவலில் வைக்கப்-