பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 364


பட்டனர். முக்கிய கலகக்காரத் தலைவர்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார்கள்.

லூஷிங்டன் சென்னை அரசுக்கு ஏற்கனவே மேலே குறிப்பிட்ட படி எழுதிய கடிதத்திலிருந்து பின்வருவனவற்றை எடுத்துக்கூறுகிறேன்.

ஜூலை கடைசியில் திருநெல்வேலி மாற்றத்திற்குப்பின் கிராமங்களிலுள்ள பொறுப்புள்ள தலைவர்களாகிய காவல்காரர்கள் நிலை என் அறிவுரைகளைக் கேட்க வேண்டிய நிலைக்கு வந்தது.

பாஞ்சாலங்குறிச்சிக் கலகத்தின்போது அவர்கள் ஒவ்வொரு இடத் திலும் ஏற்பட்ட குழப்பத்தையும் ஊக்கி உதவியளித்து வந்தனர். நாட்டை நீக்கிய பின்னர் அவர்களில் பலர் நாட்டில் தொடர்ந்து திரிய ஆரம்பித்தனர்.

அவர்கள் படைக்கலம் தாங்கிய வீரர்களாய்க் கிராமங்களைச் சூறை யாடி, மக்களைத் திருடிக் கொண்டும் மகாசனங்கள் என்னும் பிராமணர் களைக் கலங்கடித்துக் கொண்டும் இருந்தனர். (அடி சக்கை ஏன்? பாரதி பாடியது போல் அவர்களின் காட்டிக் கொடுக்கும் கலையைக் கண்டு கொண்டனரொ? - ந.ச.) -

முக்கிய குடிமக்கள் சர்க்காரிடமிருந்து தங்களுக்கு மன்னிப்புப் பெற்றுத் தருமாறு அச்சுறுத்தி வந்தனர்.

நாட்டின் நலனும் நற்பேறும் இரண்டும் இத்தகைய ஒழுங்கீனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு ஆன உடனடி நடவடிக்கைகளை எதிர் நோக்கின.

காவல்காரர்கள் திரும்பவும் அவர்களுடைய கிராமங்களுக்குத் திரும்புவதால் எத்தகைய கெடுதலும் உண்டாகாது என நானும் எண்ணிய தால் அதன்படி அவர்களில் குறிப்பாக மிகக் கொடிய குற்றவாளிகளைத் தவிர மற்றவர்கள் அவரவர்களின் இடத்திற்கு அமைதியாகத் திரும்பும் படி அழைககப்பட்டனர்.

பாளையக்காரர்களுடன் அவர் கொண்டிருந்த நீண்ட நாளைய தொடர்பும், நம்பிக்கையற்ற ஆட்சியால் அவ்வப்போது உண்டான துன் பங்களும் என்னுடைய நோக்கில் அவர்களுக்கு நம்பிக்கையின்மையை உண்டாக்கியது.

ஆனால் அடங்கியவர்களுக்கு அளிக்கப்பட்ட எங்கள் மன்னிப் பின் தன்மையை அவர்களுக்கு விளக்கி உறுதிப்படுத்துவதில் நான் வெற்றி கண்ட பின், அவர்கள் திரும்பினார்கள்.