பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

367 கால்டுவெல்

 - ந.ச.) அவன் உள்நாட்டிலுள்ளவர்களுடைய மிகப் பெரிய வெறுப்புக்கு ஆளானான். (தெரிகிறதே-இதனால் நம் முன்னோர்களின்நாட்டுப்பற்று - ந.ச.) அதனால் போரின் தொடக்கத்தில் பாளையங்கோட்டைக்கு ஓடி அங்கு அடைக்கலம் புகுந்தான். கலெக்டரின் இசைவு பெற்று போர் முடியும் வரை அங்கேயே தங்கியிருந்தான். - மேலந்தி பாளையக்காரனும் கலகக்காரர்களுடன் சேர மறுத்து இராம நாதபுரத்திற்கு ஓடினான். வரிவசூல்துறை அவனுடைய நடத்தையைச் சிறப்பாகப் புகழ்ந்து பாராட்டியது. (பின்னே! - ந.ச.) பாஞ்சாலங்குறிச்சி குடும்பத்தைச் சேர்ந்த இனத்தவனாக அவன் இருந்த போதிலும் (குலத்தைக் கெடுக்கும் கோடாரி! - ந.ச.) அக்கலகக் கூட்டத்தில் அவனைச் சேரும்படியாகக் கட்டாயப்படுத்திச் செய்யப்பட்ட சூழ்ச்சிகள் அச்சுறுத்தல்கள் யாவற்றையும் எதிர்த்து நின்றான் என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

கலகக்காரக் கூட்டத்திலிருந்து விலகியிருந்ததற்காக இந்தப் பாளையக்காரர்களுக்குக் கூடுதலான பரிசு அளித்தனர். (வேண்டியது?! - ந.ச.)

போர் முடிந்த பின்னர் பாஞ்சாலங் குறிச்சியின் தென் மாகாணங்கள் இரண்டு மணியாச்சி பாளையக்காரருக்கும் விலக்கப்பட்ட காடல்குடி குளத்தூர் பாளையக்காரர்களின்நிலங்களின் ஒரு பகுதி மேலமந்தை பாளையக்காரருக்கும் பரிசாய் வழங்கப்பட்டன. (குரங்குப் பஞ்சாயத்து - ந.ச.) -

பறிமுதல் செய்யப்பட்ட எஸ்டேட்டுகளை ஆறு மாகாணங்களாகப் பிரித்தனர். அந்த ஆறு மாகாணங்களில் நான்கை எட்டையபுரம் பாளையக்காரருக்குத் தாராளமாக (அடிசக்கை: அதனால்தான் வட்டியும் முதலும் வாங்க அந்த எட்டையபுரத்திலேயே பாரதி பிறந்தார் போலும்! - ந.ச.) ஏற்கனவே பரிசளித்து விட்டனர். - கலகக்காரப் பாளையக்காரருக்கு அளிக்கப்பட்ட தண்டனைகளிலிருந்து பணத்தைப் பொறுத்தமட்டில் எந்த வித நன்மையும் அரசுக்கு ஏற்பட்டதாக தோன்றும் நிலையைக் கூடத் தவிர்க்க அரசாங்கம் மிக்க விருப்பமுள்ளதாக இருந்தது. (என்ன தந்திரம் ஆரிய இரத்தம்! - ந.ச.) எனவே, கலகங் காரணமாக ஒவ்வொரு முறையும் ஒரு பாளையம் பறிமுதல் செய்யப்பட்டபோதும் பாளையத்திலிருந்தோ அல்லது அதன் ஒரு பகுதியிலிருந்து வரும் வருமானத்திலிருந்தோ எந்த ஒரு தொகை