பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 368

 யையும் தனக்காக அரசு ஒதுக்கி வைக்காமல் அந்நிலங்களைப் பகிர்ந்து தன்னிடம் நம்பிக்கையோடு நடந்து கொண்ட அந்தப் பாளையக்காரர் களுக்குப் பரிசளிப்பதற்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்தியது. (கடைத் தேங்காயை எடுத்து? - ந.ச.)

கலகங்களின் இறுதியில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையிலிருந்து இத்தகைய நிகழ்ச்சிகளில் அரசினுடைய நிலை யான அரசியல் கொள்கை போக்கு இதுதான் என்று அறியலாம்.

தென்பாண்டித் திருநாடு

ஆங்கிலேயர் வசம் நாட்டை ஒப்படைத்தல்: உடன்படிக்கை மூலம் திருநெல்வேலியும் கர்நாடகத்தின் மற்ற பகுதிகளும், அமைதி யான முறையில் கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த உரிமை மாற்றம் ஆட்சியாளர் மாற்றங்களை மட்டுமல்ல; அடிப் படை கொள்கை குறிக்கோள்கள், ஆட்சிமுறை மாற்றங்கள் இவைகள் அன்றியும் காலப்போக்கில் அமைய இருந்த பல்வேறு நன்மைகளுக் கான மாற்றங்களையும் உண்டாக்கின. இந்த உரிமை மாற்றம் 1801 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி ஏற்பட்டது. அன்றே கம்பெனி சார்பில் நியமிக்கப்பட்ட பிரதிநிதியிடம் எல்லாக் கணக்குகளையும் ஒப்படைத்து விடுமாறு நவாபு திருநெல்வேலியிலுள்ள அவனுடைய முக்கியமான அவில்தாருக்குக் கட்டளையிட்டான். சென்னை அரசு லூஷிங்டனை அவர்களுடைய கலெக்டராய் நியமித்து வருங்காலத்தில் ஆட்சி முறை யாவற்றிற்கும் அவனையே பொறுப்பாக்கியது. லூவிங்டனின் எண்ணத்தை முழுதும் நிரப்பிய போருக்குப்பின் நடந்த கடமைகளுள் முதன்மையானது சிவகங்கையை நிலைப்படுத்துவதேயாகும். (முக்கிய செய்தி - ந.ச.)

ஜார்ஜ் கோட்டை 1801 டிசம்பர் 1 அரசு ஆணை விளம்பரம் 1799 டிசம்பர் 9 ஆம் தேதியிடப்பட்ட அரசு விளம்பரத்தில் ஜார்ஜ் கோட்டை கருத்துரை (ஆலோசனை) மன்றத் தலைவர் மேன்மை தங்கிய எட்வர்ட் கிளைவ் பிரபுவும், அம்மன்றத்தைச் சார்ந்தவரும், பாஞ்சாலங்குறிச்சிபாளையக்காரரான கட்டபொம்மநாயக்கன்கலகங்களில், அவனும் அவனுடைய நம்பிக்கைக்குரிய அமைச்சர்கள் இருவருடைய வாழ்வும் இழிவான இறப்பில் முடிந்தது என்பதைத் திருநெல்வேலி மாவட்டப் பாளையக்காரர் அனைவருக்கும் விளம்பரம் செய்தார்.


2. மேலும் பாளையக்காரர்களின் எதிர்கால நிலையைப் பற்றிய வரையறையையும பாளையக்காரர் நாட்டு நிர்வாக நிகழ்ச்சி முறை, தான் புகுத்த எண்ணியுள்ள அரசு முறை அமைப்பு முதலியவற்றையும் அதே