பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

369 கால்டுவெல்

அரசு விளம்பரத்தில் மன்றத் தலைவர் கவர்னர் அறிவிக்கிறார்.

3. மன்றத் தலைவர் அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்த நடை முறைகளைச் செயலாற்ற முற்படுமுன், வெள்ளைமருது சின்னமருது என்னும் சிவகங்கைச்சேர்வைக்காரர்களின் தீய (?-ந.ச.) அறிவுரையால் (முக்கிய செய்தி - ந.ச.) கட்டபொம்மநாயக்கனின் உடன்பிறந்தானால் ஏவப்பட்டு, அண்மையில் தென் மாவட்டப் பாளையக்காரர்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கண்கூடாகக் கண்டிருந்தும் அத்தகைய அச்சந் தருகின்ற சான்றுகளைப் புறக்கணிக்கும்படி தூண்டப்பட்டான். அதனால் தன்னுடைய - தன்னைச் சார்ந்தவர்களுடைய மகிழ்வையும் பாதுகாப்பையும் மதிப்பிற்குரிய கம்பெனியின் பொறுப்பில் வைப்பதற்குப் பதிலாக பிரிட்டிஷ் அரசின் வலிமையைப் படைக்கலந்தாங்கி எதிர்த்துப் போராடும் இடர் நிறைந்த தீங்கான செயலில் நம்பிக்கை வைத்து விட்டான்.

4. பாஞ்சாலங்குறிச்சி, விருபாட்சி, சிவகங்கைச் சேர்வைக் காரர்கள் (இரு மருதுகள் - ந.ச.) முதலியவர்களால் தூண்டப்பட்டு, படைக்கலங்கள் தாங்கி, எதிர்ப்புணர்ச்சியுடனிருந்த கலகக்காரர்களை ஒடுக்குவதற்காகப் பிரிட்டிஷ் படைகளைக் கூட்டியபோது மேன்மை தங்கிய மன்றத் தலைவர் கவர்னர் அவர்கள் அத்தகைய கலகக்காரர்களின் ஏமாற்ற அறிவுரைகளின் விளைவுகளை எதிர்நோக்கி அவற்றைத் தென் மாகாணங்களிலிருந்த பாளையக்காரர்களுக்கும் மக்களுக்கும் விளம்பரப்படுத்தினார்.

5. அதே நேரத்தில், மேன்மை தங்கிய கவர்னர் அவர்கள் பிரிட்டிஷ் படைகளுக்குக் கொடுக்கபபட்ட இடர்நிறைந்த எதிர்ப்பு, ஏமாற்றப்பட்ட மக்களின் உயிர் இழப்பில் கொண்டு விடப்பட்டதற்காக மிக்க வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார். (முதலைக் கண்ணீர்! - ந.ச.) பிரிட்டிஷ் அரசாங்கத்தினரின் நேர்மையான ஆத்திரத்தைத் தூண்டிவிடுவதனால் ஏற்படும் இடையூறுகளையும், பிரிட்டிஷ் துருப்புகளின் உறுதி, வீரம், ஒழுங்கு இவற்றின் முன் பாளையக்காரர்களின் ஒன்றிய வலிமையால் எதிர்க்கும் முயற்சிகளும் பயனற்றவை என்பதை பாளையக்காரர், சேர்வைக்காரர், தென் மாகாணங்களின் மக்கள் முதலியவர்கள் மனதில் பதியுமாறு உணர்த்தவேண்டுவது தன் கடமை என கவர்னர் உணர்ந்தார். முயற்சி, கண்காணிப்பு, சுறுசுறுப்பான கம்பெனி பட்டாளங்களைப் பாளையக்காரர்கள் தங்கள் சொந்தக் காடுகளில் ஒளிந்திருந்து ஏமாற்ற முயற்சிப்பதிலுள்ள துன்பங்களைவிடப் பாளையக்காரர்கள் கம்