பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 370


பெனி அரசைப் படைக்கலங்கள் கொண்டு எதிர்ப்பதிலுள்ள துன்பங்கள் பெரிதல்ல என்பதைத் தென் மாநில மக்கள் நேரிலேயே இப்போது கண்டிருக்கிறார்கள்.

6. கலகத்திற்குக் காரணமானவர்கள் அவர்களுடைய காடுகளின் மையங்களிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டு, வெறுக்கத்தக்க அச்சம் நிரம்பிய குற்றத்திற்கான விசாரணைக்காக அரசாங்கத்தாரால் நிறுவப் பட்ட நீதி மன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். கலகத்தினால் உண்டாகும் துன்பத்தைப் பற்றி மன்றத் தலைவர் ஆளுநர் (கவர்னர்) அவர்களுக்கு அறிவித்திருந்தும் அவருடைய எச்சரிக்கை அறி வுரைகளைப் புறக்கணித்தமையால் அத்தலைவர்களின் மடமையான (யாருக்கு?!-ந.ச.) எதிர்ப்பிற்குத் தக்க குறிப்பிடத்தக்க தண்டனை நீக்க முடியாததாயிற்று. அன்றியும் தவறான நெறியில் சென்ற தலைவர்களின் விருப்புகளாலும், கொலை வாழ்வாலும் அவர்கள் அடைந்த அவல முடிவு, பிரிட்டிஷ் அரசைப் போரில் வென்று விட எண்ணி எதிர்ப்பதனால் ஏற்படும் துன்பத்தை இறந்த பாளையக்காரர்களின் குடும்பத்தினர் திருநெல்வேலி மக்கள் ஆகியவர்கள் மனத்தில் என்றும் அழியாதவாறு நிலைபெறச் செய்யும் என்று மன்றத் தலைவர் கவர்னர் தான் எதிர்நோக்கியிருந்த ஒரு நல்ல செயலைத் துண்டினார்.

7. அதே காலத்தில், எதிர்ப்பை உண்டாக்காத கலகங்களுக்கான தகுந்த நேர்மையான தண்டனைகளைப் பற்றி மேன்மை தங்கிய ஆளுநர் (கவர்னர்) சேர்வைக்காரர். பாளையக்காரர், தென் மாகான மக்கள் இவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இயற்கைக்கு மாறான நீக்க இயலாத இப்போர்க்காலத்தில் பிரிட்டிஷ் அரசிடம் அதைச் சார்ந்திருந்த பலர் காட்டிய உறுதியான பிடிப்பு, பெருமைப் படத்தக்க நம்பிக்கை இவற்றைக் கண்டு, கவர்னர் அவர்கள் உண்மை யானபெருமிதத்துடனும் மனநிறைவுடனும் அவர்களைப் பற்றி நினைவு கூர்ந்தார். (அவமானம்! - ந.ச.) முன் நிகழ்ச்சிபோல, மன்றத் தலைவர், கீழ்ப்படியாமை என்னும் குற்றத்திற்கான தண்டனையை நினைவு கூரத்தக்க முன்மாதிரியாகக் குறித்துக் காட்டும்படி வற்புறுத்தினார். ஆனால், பின்னர் பிரிட்டிஷ் அரசின் புகழ்மிக்க ஆதரவையும் பாது காப்பையும் பெறத் தகுந்த ஊக்கத்தையும் உண்மையையும் உடைய வர்களுடைய பாதுகாப்பு, பொருள், மகிழ்ச்சி இவற்றைப் பெருக்குவதில், தான் மகிழ்ச்சி அடைவதாக மன்றத் தலைவர் கவர்னர் கூறினார். (என்ன தடை! - ந.ச.)

8. பிரிட்டிஷ் படைகளின் முன்னேற்றத்தில் ஏற்பட்டநிலையான வெற்றி 1799 டிசம்பர் 9ஆம் தேதியிடப்பட்ட அரச விளம்பரத்தில் குறிப்