பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

371 கால்டுவெல்


பிட்டுள்ள கொள்கைகளிலிருந்து எவ்வித விலக்குகளையும் உண்டாக்க வில்லை என்ற செய்தி பாளையக்காரர், சேர்வைக்காரர், தென் மாகாண மக்கள் இவர்களின் கவனத்தினின்றும் தப்பியிருக்க முடியாது. அமைதியை நிலைநாட்டவும் ஒழுங்கான ஆட்சி நடைபெறுவதற்குமான நிலை உண்டாக்கவும் இன்றியமையாத தேவை கலகத் தலைவர்களைத் தண்டிக்கும்படி ஆளுநரை (கவர்னரை) வற்புறுத்தியபோதிலும் கலகம் செய்வதற்காகப் பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களைக் கம் பெனியிடமிருந்து அவர் பெற்றிருக்கிறார் என்பதையும் அவர்கள் கவனித்திருக்கக் கூடும். அவ்வாறு பெற்ற நிலங்களின் வருவாயை நன்றியுடன் (யாருக்கு யார் என்ன நன்றி?! - ந.ச.) நடந்து கொண்ட பாளையக்காரர்களின் பாளையங்களைச் சீர்திருத்தப் பயன்படுத்தியதைக் கண்டு பிரிட்டிஷ் ஆட்சியினர் தன் மக்கள் மேல் வைத்த நம்பிக்கையைக் கண்டு அவர்கள் மனநிறைவு எய்தியிருப்பார்கள். இந்த மேற்கோள் களிலிருந்து பிரிட்டிஷ் அரசினுடைய கொள்கைகளைச் செயல் படுத்துவதில் மேற்கொண்டுள்ள சில முறைகளை அவர்கள் உய்த் துணர்ந்து கொள்ள இயலும்.

9. இந்த அரசு விளம்பரத்தில் விளக்கப்பட்டிருக்கும் அடிப்படையின் மேல் மேன்மை தங்கிய மன்றத் தலைவர் ஆளுநர் (கவர்னர்) தென்னாட்டுப் பாளையங்களில் எதிர் காலத்தில் கலகங்கள் விளைவிக்கக் கூடிய காரணங்களை அடக்கிவிட்டதாகவும், பாளையக் காரர்கள்சேர்வைக்காரர்கள் மற்றும் உள்நாட்டுமக்கள் யாவரும் பிரிட்டிஷ் அரசின் பாதுகாப்பில் நம்பிக்கை கொள்ளலாமென்றும், அவர்கள் எங்களுடைய நாட்டு உரிமைகளையும் அவரவர் முன்னோர்களின் சமயக் கோட்பாடுகளையும் துய்த்து மகிழலாம் என்றும் ஒரு பொருத்தமான நம்பிக்கையை அவர்களிடத்தில் ஊக்குவித்தார்.

10. தென் மாகாணங்களிலுள்ள பாளையக்காரர்கள், சேர்வைக் காரர்களிடமிருந்த படைக்கலங்களினால் ஏற்பட்ட கொடும் விளைவு களைப் போக்கும் எண்ணத்துடனும், பாளையக்காரர்கள் முதலியவர் களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதும், 1799 அக்டோபர் 2 ஆம் தேதி மேஜர் பானர்மனால் வெளியிடப்பட்டதுமான அறிக்கையிலுள்ள கட்டுப் பாடுகளை நடைமுறைக்குக் கொண்டு வரவும், மன்றத்தில் கவர்னர் செய்த உறுதியான முடிவுகளாலும், பிரிட்டிஷ் அரசால் அனுமதிக்கப் பட்டு விதிவிலக்களிக்கப்பட்டவை தவிர மற்ற தீங்கு விளைவிக்கக் கூடிய எல்லாப் படைக் கலங்களின் பயன்களையும் பயிற்சியையும் ஒடுக்க செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் ஆட்சிப் பொறுப்பு கவர்னர் எட்வர்டு லார்ட் கிளைவு அறிவிக்கிறார்.