பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29 கால்டுவெல்


‘ரி’கரத்திற்குப் பதிலாக ‘ரு’கரத்தை இட்டுப் ‘பெருங்கரை’ என்று கூறினால், எழுத்திற்கு எழுத்து இப்போதைய தமிழ்ச் சொல்லோடு ஒத்திருக்கும். இதன் பொருள் ‘பெரிய கடற்கரை’ என்பது.

கிரேக்கர்கள் அறிந்த கன்னியாகுமரி

கன்னியாகுமரி இப்பொழுது திருநெல்வேலியிலில்லாமல் திருவாங்கூரில் (இந்நிலை இப்பொழுது இல்லை - ந.ச.) உள்ளது. முன்காலத்தில் பாண்டி நாட்டின் தென்கோடியாய் இருந்த திருநெல்வேலியிலேதான் அது இருந்தது. திருநெல்வேலி எல்லைக்கு அருகிலுள்ள இடமாயும் மிகப் பெயர் பெற்ற ஓர் இடமாயுமிருப்பதால், இதைப்பற்றிக் கிரேக்கர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைக் குறிப்பிடப் பெரிதும் விரும்புகிறேன். அதைக் கொமாரிய அக்ரான், கொமரியா முனை என்று தாலமியும், ‘கொமரி’ அல்லது ‘கொமார்’ என்று பெரிப்புளூஸின் ஆசிரியரும் குறிப்பிடுகிறார்கள். பெரிப்புளூஸின் ஆசிரியர், பகாரிக்கும்பின் பிரகாஸ் (அல்லது சிவப்பு) மலை தென்திசையில் தென்படுகிறது. அதன் அருகே பாண்டிய அரசர்களுக்குச் சொந்தமான முத்துக்குளித்தல் நடைபெறுகின்ற இடத்திலேயுள்ள பரலியா என்று வழங்கப்பட்ட மற்றொரு நாடும், கொல்கை என்ற பெயருடைய நகரமும் உள்ளன. இதன்படி முதலிற் காணப்பட்ட இடம் பாலிடா என்று வழங்கப்பட்டது. இதற்கு ஒரு நல்ல துறைமுகமும் அதன் கரையில் ஒரு சிறிய கிராமமும் இருக்கின்றன. இதையடுத்து அதே பெயரையுடைய முனையும் துறைமுகப்பட்டனமுமாகிய கொமார் என்ற இடமும் உள்ளன. தங்கள் வாழ்க்கையைச் சமயத்திற்கு உரியதாக்குபவர்கள் இங்கு வந்து தீர்த்தமாடித் துறவறத்தில் ஈடுபடுவார்கள். ஒரு காலத்தில் பெண் கடவுள் இங்குத் தங்கி தீர்த்தமாடியதாகச் சொல்லப்படுவதால் பெண்களும் இவ்வாறு செய்வதுண்டு. கொமாரையிலிருந்து தெற்கே முத்துக்குளிக்கும் தொழில் நடக்கும் கொல்கை (கொற்கை) வரை இந்நாடு பரவியிருந்தது. தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் இத்தொழிலைச் செய்துவந்தார்கள். பாண்டிய அரசன் முத்துக்குளித்தலில் உரிமையுடையவன். கொல்கை (கொற்கை) வரை ஒரு குடாவைச் சுற்றிப் பரவியிருந்த மற்றொரு கரையின் உட்புறத்தில் ஆரகலான் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. எபியடோரஸ் என்னும் தீவினருகே கிடைக்கும் முத்துகள் இந்த இடத்தில் மட்டுந்தான் கிடைக்கின்றன. ஆசிரியர் பெண்கடவுள் தீர்த்தமாடித் தங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது என்று கூறுவதால், இதற்கான சான்றை எழுத்துவாயிலாக எங்கேனும் கண்டுபிடித்திருப்பார் என்பது அறியக் கிடக்கின்றது. எப்படியாயினும், அத்தகைய வழக்கம்