பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 374


(ஆட்சிக் கவர்னர் ஆணையின் படி)

கையொப்பம் பி.எம். அக்னியூ,

இருப்பு: பாளையங்கோட்டை, படைத்தலைவன்.


26-12-18O1. ஆணை அதிகாரி - தென் பாளைய

மாவட்டங்கள்.

இந்த அறிக்கை திருநெல்வேலி வரலாற்றின் ஒரு காலத்தின் மிகப் பொருத்தமான முடிவாகவும், அதற்கு ஏற்ப மற்றொரு காலத்தின் மிகப் பொருத்தமான தொடக்கமாகவும் அமைந்தது. (அந்தோ! - ந.ச.)

முடிவுக் குறிப்புகள்

ஓரளவு ஆங்கில அடிப்படையிலும் ஓரளவு நவாபின் தீங்கான அடக்குமுறையிலும் (ஊட்டிய கைக்கும் உலை! - ந.ச) நடைபெற்ற ஒரு கலப்பு அரசாட்சி இவ்வாறு ஒரு முடிவை அடைந்தது. பின்னர் முற்றும் ஆங்கில ஆட்சி ஏற்பட்டது. அந்த அரசு தன்னிறைவுடையதாகவும், அது எவ்வளவு வலிமையுடையதாயிருந்ததோ அதேபோல் நேர்மையுடையதாகவும் இருந்தது. (!-ந.ச.) இந்த மாற்றத்தின் பயன்கள் மிக முக்கியமானவையும் மதிப்புள்ளவையும் ஆகும். 'பாண்டி அரசின் வரலாற்றுக் குறிப்பு’ என்ற தனது புத்தகத்தில் பேராசிரியர் வில்சன் ஆங்கில அரசு குறுக்கீடு செய்து அதிகாரத்தை கைப்பற்றியிராவிடில் ஏற்பட்டிருக்கக்கூடிய நிலைமையைக் கருத்தைக் கவர்கின்ற முறையில் எழுதியுள்ளார்.

அறிவும் ஆற்றலும் (ஆதிக்க வெறி? - ந.ச.) நிறைந்த அரசு இடையிட்டு மக்கள் வாழ்வையும் வழக்கங்களையும் நிலைநாட்டியிராவிட்டால், எழில் நிறைந்ததும் உழைப்புத் திறன் மிக்க மக்களை வாழவைக்கும் மிக்க ஈடுபாடு கொள்ளத் தக்க இயற்கை வளமும் பொருந்தியிருந்த தென்காவிரிக்கரையிலிருந்த அழகிய மாவட்டங்கள், மரபுவழிக் கதைகள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னாலிருந்த பழைய மக்கள் சமுதாயத்தை வருணிப்பது போன்ற அந்நிலைக்கு மாற்றப்பட்டு, மறுபடியும் இராவணன் வழிவந்த அசுரர்களும் அல்லது அனுமன் வழி வந்த குரங்குகளும் நிறைந்த குடியேற்ற நாடாக மாற்றப்பட்டிருக்கக் கூடும். (பாதிரி கால்டுவெல்லின் மனப்பாங்கு பாரீர் - ந.ச.)

இந்த மாவட்டத்தின் வரலாற்றில் முன்னே கூறப்பட்ட குறிப்பைப் படிப்பவர் மனத்தில் முதலில் எதிரொலிக்கக் கூடிய எண்ணம் இது தான். மற்ற பழைய பாண்டிய நாட்டைப் போல, மனித வாழ்வு தொடங்கிய கால முதல் கி.பி. 1801 வரை இருந்த தென்னிந்தியாவின் எஞ்சிய