பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 376


மாயும் மறைவிடமாயும் இருந்த நுழைய முடியாத அடர்ந்த காடுகள் ஒரளவு மறைந்தன. அவற்றிற்கு ஈடாகப் பருத்தியும் உணவுத் தானியங் களும் பயிரிடப்பட்டன. தேவையான பொழுதெல்லாம் ஆங்காங்கே நல்ல பாதைகள் போடப்பட்டன. ஆறுகள், நீர்க்கால்களின் மீதும் பாலங்கள் கட்டப்பட்டன.

ஆங்கிலேய ஆட்சியை ஏற்றுக் கொண்டனர்

பொதி சுமக்கும் மாடுகளுக்குப் பதிலாகப் பெருமளவில் வண்டிகள் ஏற்பட்டன. மூட்டைத் தூக்கிச் செல்லும் வேலைகள் முழுவதும் ஒழிக்கப்பட்டன. முழு மாவட்டப் பகுதியும் இரு முறை அளக்கப்பட்டன. இருமுறை நாட்டுப்படம் வரையப்பட்டது. குற்றஇயல் சாராத வழக்குகளைத் தீர்க்கவும் குற்றங்களைக் குறைக்கவும் ஏற்பட்ட நீதி மன்றங்களும் கச்சேரிகளும் பொறுப்பற்ற பண்டிதர்கள் பாமரப் பாளையக்காரர்கள் அளித்து வந்த அவர்கள் விருப்பப்படியான தீர்ப்புகளைப் போக்கின. நன்றாக ஆராய்ந்தமைந்த சட்ட விதிகள் பழக்கத்தில் புகுத்தப்பட்டன. ஒரு போலீசு படை அமைக்கப்பட்டது. பெயரளவில் கூட கேட்டறியாத நிலையங்கள் - மருத்துவ நிலையங்கள், மருந்து சாலைகள் முதலியவை மக்கள் நெருக்கமுள்ள இடங்களில் நிறுவப்பட்டன. 1877 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிகப் பெரிய பஞ்சத்தில் அரசு, இதற்கு முந்திய அரசு மக்களை விட்டுவிட்டதுபோல, மக்களை அழியும்படி விடவில்லை. அத்தகைய வறுமைக் காலத்தில் மக்களை இறக்கிவிடுவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாது; ஆனால், அரசே பட்டினிச் சாவிலிருந்து மக்களை எப்படியும் காக்க வேண்டுமென்ற உறுதியுடனிருந்தது. அந்தணர்களும் அதிகாரிகளும் அன்றி ஏழை மக்களிடத்திலும் கல்வி அறிவு வளரத் தொடங்கியது. அஞ்சல் தொடர்பினால் ஏற்பட்ட நன்மைகள் எங்கும் விரிவாக்கப்பட்டன. நம்முடைய காலத்திலே இரயில் பாதை தந்தி முதலிய வியத்தகு செயல்கள் புகுத்தப்பட்டதைக் கண் கூடாகக் காண்கிறோம். உண்மையான நல்லெண்ணத்துடன் குடிகளின் உரிமைகள் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளைச் சுமத்தும் அரசு ஒவ்வொரு நெருக்கடியிலும் மக்களுக்கு உதவி செய்ததன்றி, அவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்வதற்கும் உதவியது. மக்கள் இதுவரை ஆட்சி செய்யப்படாத வகையில் சிறந்த முறையில் ஆட்சி செய்யப்பட்டதன்றி தற்போது இயன்ற அளவு தங்களையே ஆட்சி செய்து கொள்ள உற்சாகப்படுத்தியது. ஒரு சில வகுப்பினரையும் நல்ல நிலைக்கு உயர்த்த அதிக முயற்சிகள் எடுத்துக் கொண்டது. விரல் விட்டெண்ணக் கூடிய ஐரோப்பியர்களால் ஆட்சி செய்யத் தக்கவாறு அந்த மாவட்டம் கிளர்ச்சியற்ற நிலை அமைதி, நிறைவு இவற்றை மிக