பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

381 கால்டுவெல்


வலிமையைச் சற்று விரிவாகப் பயன்படுத்தியிருக்கலாம். இருப்பினும் சிறந்த திறமையும் மிகுந்த ஆர்வமும் கொண்டவராக அவர் விளங்கிய போதிலும் அவர் ஒரு கற்றறிந்த மேதையல்லர். இறுதிவரை அவரால் தமிழ்மொழி பேச இயலவில்லை. ஆனால் எப்பொழுதும் மொழி பெயர்ப் பாளர்களின்துணையை நம்பியிருந்ததாகவும் தெரிகிறது.இந்த முறையில் அவருக்குப் பின்வந்த அதே இயக்கத்தைச் சேர்ந்த மற்ற போதகர்களாகிய, தமிழ்நாட்டில் தொண்டு செய்த இத்தாலிய குருமார்கள், இராபர்டி-நொபிலி, பெஸ்கி, ஆங்கிலேய மதகுரு ஸ்டீபன்ஸ், இத்தாலிய குரு அர்னால்டு, மேற்குக் கடற்கரையில் தொண்டு செய்த ஜெர்மானிய குரு ஹக்ஸ்லேடன் ஆகியவர்களைவிட சேவியர், மதகுரு என்ற முறையில் இந்துக்களிடையே வெற்றிகரமாகத் தம் சமயப் பணி செய்யத் தக்க திறனைக் குறைவாகப் பெற்றவர். ஆனால் மற்றொரு வகையில் கிறித்து பெருமான் வாழ்க்கைச் செய்தி ஏழைகளுக்கே என்ற கிறித்துவ மத தத்துவத்தைக் கிறித்துவே நிரூபித்துள்ளதை மறவாது நினைவு கூர்தலும் வேண்டும். (நம் தங்கபஸ்ப மடாதிபதிகள் தவறாது கவனிக்கவும்! - ந.ச.)

சேவியர் உறுப்பினராயிருந்த உரோமாபுரி ஏசு சபையைச் சார்ந்த அவர் எழுதிய கடிதமொன்றில் அவரது முயற்சிகளைப் பற்றிய விளக்கமான குறிப்பை வரைந்துள்ளார். அக்குறிப்பே அடிக்கடி மேற்கோளாகக் காட்டப்படுகிறது. நான் இங்கு இதன் முடிவைப் பற்றி மட்டும் எடுத்துக் காட்டுகிறேன்.

'இந்தக் கடிதத்திலிருந்து ஏசுவின் அருளுக்காகக் கூடிய மக்கள் கூட்டம் எவ்வளவு பெரியது என்பதை நீங்களே உணரலாம். மக்கள் கூட்டத்தின் நெருக்கடியை அடிக்கடி சமாளிக்க இயலாது ஞானநீராட்டு அளித்து அலுத்த என் கைகள் ஓய்ந்தன. ஒரே ஒரு நாளில் ஒரு கிராமத்தின் மக்கள் அனைவருக்கும் நான் ஞானநீராட்டு அளித்தேன். மேலும் மதக் கோட்பாடு மற்றும் மதச் செய்திகளை அடிக்கடிதிரும்பத்திரும்பக் கூறிக் குரலும் தேய்ந்தது; வலிமையும் குறைந்தது.

ஒரு கிராமத்தில் போதுமான அளவு வேலைகளைச் செய்து முடித்ததும் அடுத்த கிராமத்திற்குச் செல்வேன்; இவ்வாற முப்பது கிராமங்களுக்கும் சென்று வருவேன்' என்று சேவியர் மேலும் கூறுகிறார்.

எல்லா இடங்களுக்கும் சென்று அவ்வாறு பார்வையிட்ட பின்பு, அதே முறையில் என்னுடைய வேலை மறுபடியும் தொடங்கும். ஒவ்வொரு கிராமத்திலும் கிறித்துவ போதனைப் படி ஒன்றை வைத்து வருவேன். விழா நாட்களில் எல்லாரையும் ஒன்று கூட்டும்படிக் கேட்டுக்