பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 384


- நொபிலி அவர்களால் 1606-ல் மதுரையில் நிறுவப்பட்ட சபையைப் பற்றியும், அவருடைய நடவடிக்கைகள் அவருடைய வியத்தகு செயல் முறை இவற்றால் ஏற்பட்ட சொற்போர்கள் ஆகியவற்றைப் பற்றிய செய் திகள் ஏசு சங்கத்தைச் சார்ந்தவர்களின் கடிதங்களில் மிகுதியாகக் காணக் கிடக்கின்றன. நெல்சன் அவர்களுடைய 'மதுரை மானுவல்' என்ற புத்தகத்தில் காணக்கூடிய மதுரை இராமநாதபுரம் இவற்றின் அரசியல் நிலை, வரலாறு முதலியவற்றைப் பற்றிய மிகுதியான விளக்கங்களும் அவர்களுடைய கடிதங்களில் காணப்படுகின்றன. ஆனால் திருநெல்வேலி கடற்கரையிலோ அல்லது உள்நாட்டிலோ சங்கத்தின் வளர்ச்சியைப் பற்றித், தீவினைப் பயனாக முழு நூற்றாண்டுச் செய்திகளில் மிகச் சிலவே காணக் கிடக்கின்றன. ஸ்பெயினில் 1604-ல் வெளியான ஒரு புத்தகத்தில் அடங்கியுள்ள கடற்கரையிலிருந்த சபைகளின் நிலைமை பற்றிய செய்திக் குறிப்பு இதற்கு ஒரு முக்கிய விதிவிலக்காகும். அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை மிக்க அன்புடன் டாக்டர் பர்னல் எனக்குக் குறித்துத் தந்துள்ளார்.

அது கூறுவதாவது: "அந்தக் காலத்தில் அதாவது 1600-ம் ஆண்டில் ஏசு சங்கத்தின் உறுப்பினர்கள் 17 பாதிரிகளும் 3 சகோதரர்களும் ஆக இருபது பேர்தான் இருந்தனர். மதுரையிலுள்ள நிலக்கிழார்களாகிய நாயகர்களின் இருக்கைகளையும் சேர்த்துக் கடற்கரையினுள் 16, உள்நாட்டிலுள்ள 6 ஆக 22 மதகுருக்களுக்குரிய பிரிவுகளுக்குப் 17 பாதிரியார்களும் பிரித்து அனுப்பப்பட்டனர். இதைத் தவிர மன்னார் தீவில் மற்றவர்கள் இருந்தனர். அந்தக் கடற்கரைப் பகுதி முழுவதிலுமாக மொத்தத்தில் 90,000 மேற்பட்ட கிறித்தவர்கள் இருந்தனர். (கொச்சி பிஷப், பாரெல்லோ அக்கிறித்தவர்களின் எண்ணிக்கை 60,000 மேற் பட்டது எனக் குறிப்பிடுகிறார்) சிறப்பான குடியிருப்புகள் ஏழு தலைமை யான இடங்களில் மட்டும் இருந்த போதிலும் தேவைக்கு உகந்தவாறு ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு என மதகுருக்கள், அங்குள்ள எல்லாப் பிரிவுகட்கும், கிறித்தவக் கோயில்களுக்கும் சென்று வந்தனர்.

தூத்துக்குடி சங்கம் தலைமையிருப்பிடம். அங்கு மூன்று பாதிரியார்களும் தீக்கைபெறாத சகோதரர் மூவரும் இருந்தனர். அங்கேதனியே ஒரு மதகுருவும் இரண்டு துணை குருக்களும் இருந்தமையால் அவர்கள் கோயில் பணிகளில் ஈடுபடுவதில்லை. திருவிழாக்கள், சிறப்பாக என்-செனோரா - டி -லா -நியூவா (N Senioa De La Niews) போன்றவை மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்பட்டு வந்தன. அக்கோயில் இன்றும் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. அதற்குச் சரியான தமிழ்ப்பெயர் 'பனிமய மாதா'.உறைபனி இடத்தைப் பணித்துளி