பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

385 கால்டுவெல்


பெற்றுள்ளது. (பார்க்க: போர்ச்சுக்கீசியரின் ஆதிக்கத்தில் தூத்துக்குடி) இவ்வாண்டு 1600-ல் 700 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் நற்கருணை அளிக்கப்பட்டனர். ஹென்ரிக் ஹென்ரி ரூவஸ் (Henrique Henriques) அங்குள்ள கோயிலிலேயே அடக்கம் செய்யப்பட்டார். பொதுவாக அவர் ஒரு திருத்தொண்டராகவே கருதப்பட்டார். (1570-ல் ஏற்பட்டபஞ்சத்தில் காப்பு நிலையங்கள் இந்த மதச்சபையினரால் நிறுவப்பட்டன என்பதை நினைவு கூர்தல் வேண்டும்.)

1600-ஆம் ஆண்டுக்கான புள்ளிக் கணக்கைக் கீழ்க்காணுமாறு அவர் குறிப்பிடுகிறார்:

கடந்த ஆண்டில் சங்கத்தில் 74 பேர்களுக்கும், மனாரில் 300 பேர் களுக்கும், வைப்பாரில் 100 பேர்களுக்கும், பிரியபரனில் (இராமநாதபுரத்திலிருக்கும் பெரிய பட்டணம்) 15 பேர்களுக்கும், வேம்பாரில் 100 பேர்களுக்கும், மதுரையில் 4 பேர்களுக்கும், உள்நாட்டில் 45 பேர்களுக்கும் ஞானநீராட்டு அளிக்கப்பட்டது. மொத்தத்தில் மற்ற இடங்களிலுள்ள 50 பேர்களையும் சேர்த்து 547 பேர்கள். புதிதாக மதம் மாறுபவர்களைவிட ஏற்கனவே மதம் மாறியவர்களுக்கு மத போதனை செய்வதில்தான் அதிகக் கருத்து செலுத்தப்பட்டது என்றும் அவர் கூறுகிறார்.

அடுத்த குறிப்பு 1640-ல் உள்நாட்டிலுள்ள கயத்தாற்றில் நிறுவப்பட்ட மதச்சபைக் கூட்டமேயாகும். உள்நாட்டில் இதற்கு முன் இதுபோல் மதக் கூட்டங்கள் இருந்திருக்கலாம். ஏனெனில் 1600 இல் உள்நாட்டிலுள்ள 45 பேர்களுக்கு ஞானநீராட்டு கொடுக்கப்பட்டமையால் மதக்கூட்டங்கள் நடைபெற்றிருக்கலாம். ஆனால் இதுதான் ஏட்டில் குறிக்கப்பட்டிருக்கும் முதல் உள்நாட்டு மதக்கூட்டம்.

கமைய நாயக்கன்பட்டி

நான் காணும் அடுத்த குறிப்பு 1660-இல் அமைக்கப்பட்ட கமைய நாயக்கன்பட்டி மதக் கூட்டமாகும். அதே ஆண்டில் இறுதியாகப் போர்ச்சுக்கீசியரிடமிருந்து டச்சுக்காரர்களுக்கு மாறிய தூத்துக்குடிக்கு பால்டென்ஸ் (Baldens) வருகை தந்தார். சேவியரால் மத மாற்றம் செய்யப்பட்ட பரவர்கள் தொடர்ந்து உறுதியாக அம்மதத்தைக் கடைப்பிடித்து வந்தனர் என்பதை அவர் வாசகங்கள் எடுத்துக்காட்டுகின்றன என்பதும் அதில் காணப்படுகிறது.

எட்டயபுரம் ஜமீன்தாரியிலுள்ள ஒரு கிராமம் கமையநாயக்கன்பட்டி, இந்த இடத்திலுள்ள கிறித்துவக் கோயிலில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் கல்வெட்டு அக்காலத்திய சுவைநிரம்பிய நினைவுச்