பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 386

சின்னமாகும்.

"எண்ணுற்று - அறுபத்தைந்தாம் ஆண்டு. சித்திரை மாதம் 19 ஆம் நாள். நாங்கள் ஜகவீர எட்டப்பநாயக்கர் அவர்கள் செய்யும் அறிவிப்பு வருமாறு:

‘எங்கள் தந்தையார் காலத்தைப்போல. இருபத்தைந்து ஆண்டுகட்குமுன் எங்கள் எல்லையில் உள்ள இந்தக் கடவுளின் தேவாலயமும், உரோமாபுரி குருக்களின் மடமும் தீங்குகளினின்றும் பாதுகாப்பளிக்கப்பட்டிருந்தன. அதே போன்று தற்போது நாங்கள் அதையே தொடர்ந்து செய்ய உறுதிசெய்திருப்பதால் இந்தக் கோயிலுக்கு வருகை தந்து குருக்களைக் கண்டு, இக்கல்வெட்டை நாட்டியுள்ளோம். ஆகவே யாரேனும் இந்தத் தேவாலயக் கடவுளுக்கோ அல்லது குருக்களுக்கோ அல்லது அவர்களுடைய சீடர்களுக்கோ தீங்கு செய்வானேயானால் அவன் நமக்குத் தேசத்துரோகியாவது மட்டுமன்றிக் கங்கைக்கரையில் கரும்பசுவையும் பார்ப்பனனையும் கொன்ற பழிக்காளாவான். சந்திர சூரியர் உள்ள காலம் வரை இக்கட்டளையை விதித்துள்ளோம். ஜெகவீர எட்டப்ப நாயக்கர். கடவுள் (எங்களைக்) காப்பாராக.”

திருநெல்வேலியில் அக்காலத்திலிருந்த மலபார் அல்லது கொல்லம் நூற்றாண்டில் கணக்கிடப்பட்ட 865 ஆம் ஆண்டு கி.பி.1689-90 ஆண்டுக்குச் சரியானது என்று கணக்கிடப்பட்டது. அந்த ஆண்டு - செப்டம்பரில் தொடங்குகிறது. எனவே அடுத்துவந்த ஆண்டின் முன் பகுதி ஏப்ரல்-மேக்குச் சரியானசித்திரை 1690ஆம் ஆண்டைச் சேர்ந்தது. மலபார் நூற்றாண்டின் அந்த ஆண்டு 60 ஆண்டு வட்டத்தில் அந்த ஆண்டிற்கு முந்தியதாகக் கல்வெட்டிலுள்ளது. ஆனால், தீவினைப் பயனாக, அந்த ஆண்டு சிதைந்து 'பி' என்ற எழுத்து மட்டும் காணப்படுகிறது. மலபார் ஆண்டு 865க்குச் சரியான 60 ஆண்டு வட்டத்தில் சித்திரையில் ஆரம்பிக்கும் ஆண்டு பிரம்மோதூத என்ற நான்காவது ஆண்டாகும்.

ஜகவீர எட்டப்ப நாயகர் என்பது யாரையும் குறிக்கும் தனிப்பெயரல்ல. ஆனால் அது பாளையக்காரர்கள் அல்லது எட்டயபுரம் ஜமீன்தார்களின் குடும்பப் பட்டப் பெயராகும். இந்தக் கல்வெட்டில் கண்ட பாளையக்காரன் அதாவது 1690-ல் இருந்தவன் பரம்பரை வரலாற்றின் படி ஜகவீர ராமகசிலா எட்டப்ப நாயகன். அவனால் குறிப்பிடப்படும் அவன் தந்தையின் பெயர் ஜகவீரராம எட்டப்ப நாயகன். 1690-ல் ஏற்பட்டதாகக் கூறப்படும் தொல்லைகள் 25 ஆண்டுகட்கு முன்பாக 1665-ல் ஏற்பட்ட தொல்லைகள் ஆகியவை அண்டையிலுள்ள பொது