பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

387 கால்டுவெல்


மக்களால் ஏற்பட்ட தீங்குகளாகத் தோன்றுகின்றன. இந்த இரண்டு சமயங்களிலும் சொல்லப்பட்ட பாளையக்காரர் அந்த எல்லைக்குத் தனி அதிகாரியாக இருந்ததால் அவருடைய உதவியையும் இரக்கத்தையும் கிறித்துவ மதகுருக்களுக்கு நல்கினார்.

முதல் இடையூறு சமயத்திருக்கூட்டம் ஏற்பட்ட உடனே நேர்ந்தது. அண்மையில் போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர்களால் தூத்துக்குடியிலிருந்து துரத்தப்பட்டனர். கடற்கரை மதச்சபையைச் சேர்ந்த கிறித்துவ குருமார்களும் உள்நாட்டில் அடைக்கலம் புகவேண்டியிருந்தது. தூத்துக்குடிக்கு அதிக தொலைவில்லாத பாளையக்கார எல்லையிலுள்ள சில மக்கள் மத குருக்களின் ஐரோப்பிய நண்பர்களின் வீழ்ச்சியைப் பயன்படுத்தி அவர்கள் ஊர்களிலிருந்து மதக்குருக்களைத் துரத்துவதற்கு முயற்சி செய்யும்படி இந்நிகழ்ச்சி தூண்டியிருக்கலாம்.

அதற்குப்பின் 1715-இல் அப்போது கமையநாயகன் பட்டியிலிருந்த புகழ்பெற்ற பெஸ்கி அதற்கு மேற்கே சிறிது தள்ளி அமைந்திருந்த பாளையக்காரரின் எல்லைக்குட்பட்ட மக்களின் பகைமையால் பெருங்காயங்களுக்கு ஆளானார் என்றும் அறியப்படுகிறது.

டச்சுக்காரர்களின் நடத்தை

1700-இல் மார்ட்டின் பாதிரியாரால் எழுதப்பட்ட கடிதத்திலிருந்து ஏற்கனவே தூத்துக்குடி நகரத்தின் நிலையைப் பற்றி விளக்கமாக ஒரு மேற்கோள் காட்டியுள்ளேன். அதே கடிதத்தில் அந்தக் காலத்தில் டச்சுக்காரர்களிடமிருந்து பரவர்கள் பெற்ற கொடுமையான பட்டறிவுகளைப் பற்றிய சில பிரதிபலிப்புகளை நான் கண்டேன். அந்தக் கடற்கரைக்கு டச்சுக்காரர்கள் அதிகாரிகள் இல்லை எனினும் அப்பகுதி முழுவதும் அவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது போன்று இன்றுவரை அடிக்கடி நடந்து கொள்கின்றனர். சிறிது காலத்தில் பரவர்களிடமிருந்து கிறித்துவக் கோயில்களைக் கைப்பற்றி அவற்றைப் பண்டகசாலைகளாக மாற்றினர். குருமார்களின் இல்லங்களில் அவர்களுடைய மூலப்பொருள்களைச் சேமித்து வைத்து வந்தனர். அதனால் குருமார்கள் காடுகளுக்குள் பின் வாங்கும்படி நெருக்கப்பட்டனர். அவர்களுடைய அணிமை தேவைப்படுகின்ற ஒரு காலத்தில், மதகுருவுக்கு உட்பட்ட மக்கள் தொகுதியினரை விட்டு விலகிச் செல்தல் கூடாது என்பதற்காக அக்குருமார்கள் காடுகளுக்குள் குடிசைகள் கட்டிக் கொண்டனர்.

தற்காலத்தில் பொதுவாக நிலவியிருக்கும் பொறுக்குந் தன்மையை நோக்குங்கால் இந்தச் செய்தி இக்கதையில் அடுத்த பகுதியையும் இயல்பாகக் கேட்க விரும்பத் தூண்டும் அசாதாரணமாகத் தோன்றுகி