பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 388


றது. போர்ச்சுக்கீசியரிடமிருந்து டச்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்ட இரண்டு ஆண்டுகட்குப் பின்னர் 1660-இல் தூத்துக்குடிக்கு வருகை தந்த டச்சு அமைச்சரும் சமயப் பரப்பாளருமாகிய பால்டியஸ் (Baldaeus) அந்த மறுபகுதி பற்றிய செய்திகளை நமக்கு அளிக்கிறார். இந்த எதிர்வாதங்களும் தீவினைப்பயனாக மார்ட்டினின் வாக்கால் உறுதி படுத்தப்படுகிறது. பரவர்களின் குருக்கள் எண்ணிக்கையில் மிகப் பலவாக இருப்பதைக் கண்டதாகப் பால்டியஸ் கூறுகிறார். அவர்கள் சிறப்பாக கோவாவின் சுதேசிகள்.

பாதிரிமார், பரவர்களின் கருத்தை ஈர்க்கச்செய்த அவருடைய ஒவ்வொரு செயலுக்கும் எதிர்செயல் புரியத் தக்கவராயிருந்தனர். அவர்களுக்கு கல்வி பயிலாத பரவர்களிடம் அவ்வளவு செல்வாக்கு இருந்தது. டச்சுக்காரர்கள் இந்தக் குருக்களை நாகப்பட்டினம், துத்துக்குடி முதலிய நகரங்களிலிருந்து துரத்தினர். ஆனால் அவர்கள் பரவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக வெகு அருகாமையிலேயே தங்கியிருந்தனர். பால்டியஸ் போர்ச்சுக்கீசிய மொழியில் சொற்பொழிவு செய்தும்கூட அக்கிறித்துவக் கோயில்களுக்குள் அவர்கள் நுழையத் துணியவில்லை. மற்றொரு நிகழ்ச்சியிலிருந்து அவர் குறிப்பிடுவது வருமாறு: டச்சுக்காரர்கள் கோவிலிலிருந்த உருவச்சிலைகளையும் அணிகலன்களையும் அகற்றிக் கோவிலைத் தங்கள் சொந்த வழக்கத்திற்கேற்ப மாற்றியமைத்துக் கொண்டனர். அதனால் பரவர்கள் அதற்குள் நுழையாமல் தெருவிலேயே தங்கள் வழிபாடுகளைச் செய்வதற்கு இயலாதபடி செய்தனர் என்று தெரிகிறது. அதற்குப்பின் டச்சுக்காரர்கள் மிகவும் சகிப்புத்தன்மையுடைவர்களாகித் தாங்களே கோயில்களை எழுப்பினர். தற்போது ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்படும் தூத்துக்குடியிலுள்ள கோயில் கட்டப்பட்ட தேதி 1750 ஆகும்.

பெஸ்கி

சேவியரின் மதத் தொண்டுகள் தொடங்கிய நிகழ்விடமாக இருந்தது திருநெல்வேலி கடற்கரை. மேலும், சற்றேறக்குறைய 200 ஆண்டுகட்குப் பிறகு அச்சமயத் தொண்டுகள் முடிவுற்ற மற்றொரு நிகழ் விடமாகவும் அது இருந்தது. அன்றியும் ஏசு சங்கத்தைச்சார்ந்த மற்றொரு புகழ்பெற்ற மதகுருவாகிய பெஸ்கியின் வாழ்க்கைத் தொடக்கமும் அங்கேதான் தொடங்கிற்று.

சமயப் பரப்பாளர் என்ற வகையில் பெஸ்கி உரோமன் கத்தோலிக்கக் கோவிலைச் சேர்ந்தவர். அவர் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், கவிஞர். எனவே உரோமன் கத்தோலிக்கர்களைப் போலவே சிறப்பாக அவர்களை