பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 390

மேலும் புனித வேதத்தில் நிகழ்ச்சிகளையும் விளக்கங்களையும் இந்துக்கள் சார்புடையதாகவும் வேதத்தில் நிலநூல் விளக்கங்களைக் கூட இந்துக்களின் விருப்பத்திற்கு உகந்தவாறு மாற்றியமைக்க முயன்ற குற்றத்திற்காக அதன் அழகு மிகுதியாகக் குலைக்கப்பட்டுவிட்டது. தற் போது இந்தியாவில் தமிழ் உரைநடை செய்யுள் இரண்டும் முறையே பெற்றிருக்கும் இடங்களின் வேறுபாடே இதற்குப் போதிய சிறந்த எடுத்துக்காட்டாகும். பெஸ்கியின் செய்யுள்கள் அதிகமாகப் பாராட்டப் படினும் தற்போது வெகு சிலராலேயே அவை படிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவருடைய உரைநடை நூல்கள் குறிப்பாக இலக்கணங்கள், தமிழ், திசைமொழிகள் இவற்றின் அகராதிகள் ஆகியவை மிகவும் போற்றப்படுகின்றன.

பெஸ்கியின் வாழ்க்கை

சமயப் பரப்பாளராகவும் தமிழ் அறிஞராகவும் மிகச் சிறப்புற்றிருந்த பெஸ்கியின் பெயரில் அவர் வாழ்க்கையின் நினைவுக்குறிப்புகள் எதுவும் அவருடைய சொந்த ஏசு சமயத்தாராலோ அல்லது நினைவுக் குறிப்பு எழுதக் கூடிய திறன் வாய்ந்த எந்த ஐரோப்பியனாலோ எழுதப்படாதது மிக்கவியப்பளிக்கிறது. அவர் வாழ்க்கையின் பல நிகழ்ச்சிகள் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருக்கின்றன. ஆனால் அது பெஸ்கி மறைந்த எழுபது ஆண்டுகட்குப்பின் அவரைப் பற்றி நிலவிய எல்லா விவரங்களையும் சுதேசிகளிடமிருந்து பெற்ற ஒரு கத்தோலிக்க கிறித்தவர் எழுதிய தமிழ் நினைவுக் குறிப்பையே அடிப்படையாகக் கொண்டிருப்பதை நான் கண்டேன். 1796-ன் பாண்டிச்சேரியிலிருந்து சாமிநாதப்பிள்ளை என்பவரால் வெளியிடப்பட்ட மிகச் சிறிய நினைவுக் குறிப்பை இவர் பயன்படுத்தியிருந்தார். ஆனால் எந்த ஆங்கிலேய ஆவணக் குறிப்புகளையும் அவர் பயன்படுத்தியதாகவே தெரியவில்லை. இங்கு குறிப்பிடப்படும் சுதேசி செயின்ட் ஜார்ஜ் கோட்டை கல்லூரி மேலாளராகப் பணியாற்றிய அ. முத்துசாமிப்பிள்ளையாவார். இவர் 1816லிருந்து 1817 வரை பெஸ்கியின் நூல்களைச் சேகரிப்பதற்காகப் புகழ் பெற்ற தமிழ் அறிஞர் திரு. எல்லிசு அவர்களின் கருத்தின்படி தெற்கே சுற்றுப் பயணத்தை ஏற்றார். அவர் சுற்றுப் பயணத்தின்போது பெஸ்கியின் சீடர்களின் பிள்ளைகளிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் பெஸ்கியின் வாழ்க்கையைப் பற்றிய பல குறிப்புகளைச் சேகரித்ததாகக் கூறினார். (ஆராய்ச்சிக்குச் சுற்றுப் பயணம் எவ்வளவு அடிப்படை! - ந.ச.) கல்லூரி நிர்வாகக் குழுவின் உறுப்பினர் திரு. பாபிங்டன், திரு. கிளார்க்கி - இவர்களின் வேண்டுகோட்களுக்கிணங்க 1822-ல் அவர், நான் குறிப்பிட்ட பெஸ்கியின் வாழ்க்கைக் குறிப்பை வெளியிட்டார். அதில் பெஸ்கியின் நூல்களின்