பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

395 கால்டுவெல்


சதாராவுக்குக் கைதியாக அனுப்பப்பட்டான். பெஸ்கி தன்னுடைய தலைவன் சரணடைந்தவுடனே திருச்சிராப்பள்ளியிலிருந்து தப்பி விட்டார் என்று அவர் நாட்டு வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் கூறுகிறார். ஆனால் அந்தச் சமயத்தில் ஐரோப்பியாவுக்கு எழுதப்பட்ட கடிதங்கள், அந்த நிகழ்ச்சிக்கு முன்பே, 1740 இல் மராட்டியர் அங்கு வந்து சேர்ந்த வுடனேயே எல்லாச் சமய வாதிகளும் - தெளிவாக பெஸ்கியும் - இதில் சேர்ந்திருத்தல் வேண்டும்; மராட்டியர் வந்து வயப்படுத்திக் கொண்ட மாவட்டங்களை விட்டுவிட்டு - தெற்கு நோக்கி ஒட வேண்டியதாயிற்று என்று கூறுகின்றன. சந்தா சாகிபு அடைக்கலம் புகுந்த பிறகு, மராட்டியர்கள் தங்கள் படைத் தலைவர்களில் ஒருவரான மொராரிராவ் என்பவரைத் திருச்சிராப்பள்ளியில் ஆளுநராகவும் அப்பாஜிராவ் என்ற மற்றொருவரை மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் ஆளுநராகவும் நிய மித்தார்கள். எந்த ஆட்சியாளரைப் பற்றியும் கவலைப்படாதப் பாளையக் காரர்கள் தவிர (ஒ?! - ந.ச.) மற்ற முழுநாடும் இப்பொழுது மராட்டியர் வசமாயிற்று. மராட்டியர்கள் இந்து மத வெறியர்கள் (இப்படிச் சொல்லுவது - சொல்லுபவர் - சரியோ? - ந.ச.). மராட்டியர்கள் கையில் சந்தா சாகிபின் திவான் அகப்பட்டிருந்தாலும், அவர்கள் அவன் மேல் அதிகமாகச் சலுகை காட்டியிருக்க மாட்டார்கள். ஆகையால் இயல் பாகவே பெஸ்கி தனக்கேற்பட்ட விரைவான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தப்பிக்க முயற்சி செய்திருக்கலாம். பெஸ்கி முதலில் மறவர் நாட்டிற்கு அதாவது இராமநாதபுரத்திற்கும், பின் அங்கிருந்து கடற்கரை நாட்டிற்கும் ஓடிவிட்டார் என்று ஐரோப்பாவுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் கூறுகின்றன. மறவர் நாட்டில் எந்த இடத்தில் அவர் வசித்து வந்தார் என்று சிறிதுகாலம் வரை தெரியவில்லை. ஆனால் அவர் நாட்டு வாழ்க்கை வரலாற்று ஆசிரியரும், அப்போது ஐரோப்பாவுக்கு எழுதப் பட்ட கடிதங்களும் கடற்கரை நாட்டில் எங்கு அவர் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார் என்ற குறிப்பை ஒரேவிதமாகத் தெரிவிக்கின்றன. இது திருநெல்வேலி கடற்கரையிலுள்ள மணப்பார் (மணப்பாடு) (சரியாக மணல்பாடு, மணல் உப்பங்கழி) என்ற இடமாகும். இது டச்சுக்காரர் வசமிருந்தது. மீன்பிடிக்கும் தொழிலும் வாணிபமும் நடைபெற்ற சிறிய நகரம். ரோமன் கத்தோலிக்கக் கிறித்துவ மக்களையுடையது; பகைமைக்கு அப்பாற்பட்டது. பெஸ்கி 1744 இல் மணப்பார் என்ற அவ்வூரின் மதகுருவாக இருந்தார் என்றும் 1746 இல் அங்கு அவர் இறந்தார் என்றும் நம்பகமாக ஆவணங்களிலிருந்து உறுதியாகிறது. இது அவரது 66வது வயதில் இந்தியாவில் வந்து தங்கிய 40 வது ஆண்டில் நடைபெற்றது. பெஸ்கி கோவாவை விட்டு வந்தபின், வாழ்ந்த முதல் இடம், தமிழ்நாட்டிலுள்ள இடம், மணப்பார் ஆக இருக்கலாம். எனவே