பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

401 கால்டுவெல்


அன்றிலிருந்து மே 1800 இல் அவர் இறந்த காலம் வரை ஜேனிக் பொதுவாக இராமநாதபுரத்திலே தங்கியிருந்தார். அங்கோ அல்லது தஞ் சாவூரிலோ அவர் ஒரு கோயிலைக் கட்டுவித்தார். அவர் உடல்நிலை ஒத்துழைத்தபோதெல்லாம் அவ்வப்போது பாளையங்கோட்டைக்குச் சென்று வந்தார். ஆனால் அவர் உள்நாட்டு அமைச்சரான சத்திய நாதருடன் தொடர்ந்து கடிதப் போக்கு வைத்துக் கொண்டிருந்தார்.

சாணார்களைக் கிறித்துவர்களாக மதமாற்றம் செய்யத் தொடங்கல்

அக்காலத்திய மிக முக்கிய நிகழ்ச்சி, 1797 இல் திருநெல் வேலியிலுள்ள சானார்களிடையே பிராட்டஸ்டண்ட் கிறித்துவ இயக்கம் தொடங்கப் பெற்றதாகும். இந்த இயக்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு மிக அதிகமாகப் பயன்பட்டது. (இந்துவின் கருத்திற்கு - ந.ச.) நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இதையொத்த பல இயக்கங்களுக்கு இது முன்னோடியாகவும் அமைந்தது.

சுந்தரம் என்ற டேவிட் சாணாரில் முதல் சமய போதகராக இருந்தது நீண்டநாட்களாக அறியப்பட்ட செய்தியாகும். ஆனால் அவர் முதல் சாணார் பிராட்டஸ்டண்டு கிறித்துவர் என்றும், அவர் மூலமாகவே திருநெல்வேலி சாணார்களிடையே கிறித்துவம் புகுத்தப்பட்டது என்றும் நான் உறுதிப்படுத்திக் கொண்டேன். டேவிடினுடைய பிறந்த ஊர் கள்ளங்குடி. அது சாத்தான்குளத்தருகே உள்ள ஒரு சிறிய கிராமம். ஆனால் இளமையில் அவர் தஞ்சாவூர் வரையில் சுற்றி வந்திருக்கிறார். அங்கு அவர் கிறிஸ்தவரானார். திரு. கால்காப் என்பவரால் புனித நீராட்டு பெற்று அறிவுரையும் பெற்றார். 1796 இல் சத்தியநாதன் தனக்கு ஒரு உதவியாளர் தேவை என்று விண்ணப்பித்த காரணத்தால் ஸ்வார்ட்ஸ், டேவிட் அந்த ஊர் அருகாமையைச் சேர்ந்தவர் என்று அறிந்து, அவரை மதபோதகராகப் பாளையங்கோட்டைக்கு அனுப்பி வைத்தார். நான் இறந்து விட்டதாக எண்ணி வருந்தி மறந்துவிட்ட உறவினரைக் காணவும், அவர்களுக்குத் தான் கண்ட கேட்ட வியத்தகு நிகழ்ச்சிகளை எல்லாம் சொல்லிவிட்டு வரவும் டேவிட் சென்ற போது ஜேனிக் பாளையங்கோட்டையிலிருந்தார். அவர் பாளையங்கோட்டைக்குத் திரும்பியபோது தன்னுடன் சிறுவனாகிய மருமகன் ஒருவனை அழைத்து வந்தார். அவனுக்கு ஜேனிக் மதபோதனை செய்தார். இதற்குப் பிறகு டேவிட் அவரது பிறந்த ஊருக்கு அருகாமையிலிருந்த கிராமமாகிய விஜயராமாபுரத்திற்கு அவர் உறவினரிடையேயும் சுற்றுச்சூழலில் இருப்பவருக்கும் தொண்டு (இந்துவின் கருத்திற்கு - ந.ச.) செய்யும்படி அனுப்பப்பட்டார். அவ்வப்போது சில தஞ்சாவூர் மதபோதகர்களும்