பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

403 கால்டுவெல்


உதவி செய்து வந்தனர். 1797 மார்ச்சு மாதத்தில் சத்தியநாதனே இந்த இடத்திற்குச் சென்ற போது நான்கு சாணார் குடும்பத்தினர் முறையாக கிறித்துவ மதபோதனை கேட்டு மதபோதகராகிய டேவிட்டின் பாதுகாப்பி லேயே இருந்தனர்.

அடுத்து அவர் அங்கு சென்ற போது. அதே வகுப்பைச் சேர்ந்த மதமாற்றம் பெற்றவர்கள் இன்று கடாட்சபுரம் என்று அழைக்கப்படு மிடத்தில் புனித நீராட்டுப் பெற்றனர். புனித நீராட்டு பெற்ற முதல் சாணார்கள் அவர்களே. அதே ஆண்டில் விஜயராமாபுர மக்களும் புனித நீராட்டுப்பெற்றனர்.இரண்டு ஆண்டுகளுக்குப்பின்னர், முதல் கிறித்துவ கிராமம் திருநெல்வேலி சபை சார்பில் தோற்றுவிக்கப்பட்டது. விஜயரா மாபுரத்திலுள்ள புதிய கிறித்தவர்கள் அவர்களுடைய கிறித்துவரல்லாத அண்டை அயலாரால் மிகுந்த தொல்லைகளுக்கு உட்பட்டார்கள். அவர்களுடைய சிறு வழிபடும் வீடு இரண்டு முறை அடித்தெறியப் பட்டன. ஒரு மரத்தடியில் கூடி வழிபாடு செய்ய அவர்கள் அனுமதிக்கப் பட்டனர். நாளடைவில் அவ்வாறு இரக்கமின்றி நடத்தப்பட்ட அந்த கிரா மத்தை விட்டே நீங்கிச் செல்ல அவர்கள் முடிவு எடுத்தனர். (இந்துக் களின் சகிப்புத் தன்மை! - நச) சில மைல்கள் துரத்தில் அடையாள் கிராமத்தருகே ஒரு சிறு துண்டு நிலத்தை டேவிட் அவர்களுக்காக வாங்கினார். பாளையங்கோட்டையிலுள்ள ஒரு காப்டன் எவரெட் அவர்களிடமிருந்து பெற்ற தனிப்பெரும் உதவியுடன் அங்கு ஒரு கிணற்றை வெட்டினார். சிறு கோவில் ஒன்றைக் கட்டினார். அந்த நிலம் திரு.ஜேனிக் அவர்களின் பெயரில் 1799ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வாங்கப்பட்டது. இந்தச் சிறிய குடியிருப்பு திருநெல்வேலியில் ஒரு கிறித்துவக் கிராமம் என்றழைக்கும்படியான முதல் இடமாக அமைந்ததால், அந்த இடம் [முதல்' 'நகரம்' என்ற பொருளில் 'முதலூர்' என்ற பெயர் பெற்றது (எவ்வளவரிய செய்தி - ந.ச.). இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த கிராமத்தின் மக்கள் தொகை இருபத்தெட்டு பேர்களெனக் கணக்கிடப்பட்டது. இப்பொழுது அது 1200க்கும் மேலாக உள்ளது. (மக்கள் பெருக்கக் கணக்குப் பயன்படும் - ந.ச.) திருநெல்வேலி சாணார்களிடையே கிறித்துவ மதத்தைப் பரப்ப ஆரம்பித்த இயக்கத்தைப் பற்றிய சுவையான செய்திகளும், முதலூரை நிறுவியதும் இன்று நினைவுக்கு அப்பாற்பட்ட செய்திகளாக ஆகிவிட்டன. ஜேனிக்கிற்குச் சத்தியநாதனும் மற்றவர்களும் எழுதிய, தஞ்சாவூரிலிருந்து கிடைத்த தமிழ்க் கடிதக் கட்டிலிருந்து நான் இவற்றைக் கண்டுபிடித்தேன். அங்கு நடைபெற்ற ஒவ்வொரு செய்தியையும் அவருக்கு சத்தியநாதன் ஒழுங்காகத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். சத்தியநாதனின்கடிதங்களில் அவருடைய பல கேள்விகளுக்கான விடைகள் நிரம்பியிருப்பதைக்