பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 410


தம்பியினுடைய உரிமைகளின் உண்மையினை விசாரிக்கச் செய்தார். இதையறிந்த மகாராஜா மாநில செயலர் இராமஐயனையும் அவரது உதவியாளர் நாராயண ஐயனையும் முதலியாரிடம் அனுப்பி வைத்தார். பாபுத் தம்பியின் உரிமைகள் பற்றிய மோசத்தினையும் கற்பனைப் பண்புகளையும் மெய்ப்பித்தலுக்கான தக்க ஆவணச் சான்றுகளையும் அவர்களிடம் கொடுத்தனுப்பினார்.

தனது போலியான உரிமைகளை நிலைநாட்டத்தக்க ஆவணச் சான்றுகளைக் காட்ட இயலாது பாபுத்தம்பி திணறியபோது இராமஐயன் தனது பெரியப்பா (uncle)வின் அரசுரிமையைப் பெற மகாராஜாவுக் குள்ள உரிமைகளை முழுமையாக நிரூபித்தான். முதலியார் பாபுத் தம்பியிடம் மிகக் கோபம் கொண்டு, உடனேயே அவனுடைய பொய் யான குற்றச்சாட்டை ஏற்க மறுத்துவிட்டார். நாட்டின் வழக்கப்படி அவனுடைய அரசனிடம் அவன் உண்மையுள்ளவனாகவும் அடங்கிய வனாகவும் இருக்க வேண்டுமென்று எச்சரிக்கப்பட்டார்.

தன்னுடைய படைத்தலைவர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட கலகம் செய்கின்ற உணர்வைப் பற்றி மகாராஜா முதலியாரிடம் கூறி, அவருடைய படையில் பாதியை அரசருக்கு அனுப்ப வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். அரசனின் இந்த வேண்டுகோளை முதலியார் ஏற்றுக் கொண்டு, பரிசுப் பொருள் சுமைகளோடு திருச்சிராப்பள்ளிக்குத் திரும்பினார்.

மகாராசா குஞ்சுத்தம்பிகள், படைத்தலைவர்கள், பிரபுக்களுடைய ஒழுக்கத்தினால் கோபமடைந்திருந்தாலும், இந்தச் செய்தியில் கருத் தின்றி யிருப்பதுபோல் காட்டிக் கொண்டார். அரசர், திருச்சிராப்பள்ளிப் படையின் வலிமையான உதவி பெற்றிருப்பதால் தன்னுடைய சொந்த மறவர் படைகளுடன், அவருடைய எதிரிகளின் சூழ்ச்சிகளால் அவருடைய அரசின் அமைதி குலைவதற்கு முன்பு சில இன்றியமையாத அரசியல் அலுவல்களில் அவருடைய சிந்தனையைச் செலுத்தினார். - திருவாங்கூர் வரலாறு பக். 115-118.

திருநெல்வேலி மறவர்களிடமிருந்து பெற்ற உதவி திருநெல்வேலி பாளையக்காரரின் உதவி

அரசரின் மறைவை அறிந்திருந்தபோதிலும், சாயன்குளம் படையின் ஆர்வம் முழுதும் சிதறவில்லை. ஏனெனில் இறந்து பட்ட அரசரின் இளையதம்பி அரசு பெற்றதாலும், அவர் உறுதியும், காலம் சென்ற அண்ணனைவிட வீரமும் வாய்ந்தவராகலின், போர் இரட்டிப்பு வலிமை யுடன் தொடர்ந்தது. மகாராசா கொய்லானுக்குச் சென்றபோது தனது