பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 412


சந்தா சாகிபு பாடாசாகிபுக்களின் இடையீடு

இந்தச் சமயத்தில் ஆற்காடு நவாப் தோஸ்த் அலிகானின் உற வினர்களாகிய சந்தாசாகிபு, பாடாசாகிபு, தலைமையில் வலிமைமிக்க பல மறவர் கூட்டம் ஆரம்பாலி வாயில் வழியாகத் திருவாங்கூர் எல்லைக்குள் நுழைந்தனர். அவர்கள் நவாபினுடைய மகனுக்கு சிற்றரசு உரிமையைத் தேடுவதற்காக அலைந்து கொண்டிருக்கவும் உள்நாட்டு இளவரசர்களுடைய நாட்டில் தங்களுக்காகக் கொள்ளையிடவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் நாகர்கோவில், சுசீந்திரம், கோட்டாறிலுள்ள செல்வ நகரங்கள் யாவற்றையும் தங்கள் வசப்படுத்தினர். சுசீந்திரத் திலுள்ள கோயில் சிலைகளைக் கொள்ளை அடித்தனர். பெரிய தேரை எரித்தனர். கோயிலிலுள்ள பல சிலைகளைச் சிதைத்தனர். பொதுவாக மொகலாயப் படைவீரர்கள் கடைப்பிடிக்கும் விருப்பமான முறைகளாகிய பல கொடுஞ்செயல்களையும், அழிவுச் செயல்களையும் செய்தனர். தளவாய் இராமய்யன் ஒரு படையுடன் சென்று திருவாங்கூரை விட்டு மறவர்களை ஒட்ட வேண்டுமென்று கட்டளையிடப்பட்டார். ஆனால் நேரில் அப்படையைச் சந்தித்த போது, அவர்கள் குதிரைப்படை மிக்க வலிமையுடையதாயிருந்ததையும் கண்டு, தன்னுடைய சொந்தப் படை, முசல்மான்களுடைய படைக்கு ஈடாகாது என்று கண்டார். எனினும் தளவாய் வஞ்சினம் கூறிப்போரைத் தொடங்கினான். ஆனால் அவருடைய முயற்சிகளெல்லாம் வழக்கமான வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. தளவாய் எதிரியின் குறிக்கோள் முக்கியமாக பணம் பறிப்பதற்கேயென்று உணரக் காரணங்களை அறிந்தார். இறுதியாக அவர் தன்னுடைய படைக்கு எதிர்ப்பு அளிக்காமலேயே எதிரியின் படை பின்வாங்கும்படி செய்தார். பக்-138.

நவாபுடன் (கைகலப்பு) தாக்குதல்

வட திருவாங்கூரில் போர் தொடங்கியிருந்த போது மதுரை திருச்சிராப்பள்ளி முதலிய ஊர்கள் உட்படப் பாண்டிய மாநிலங்களின் அரசியலில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. இறுதியாக அரசு கர்நாடக நவா பின் கையகப்பட்டது.நீண்டநாட்களாக மகாராசாவின் கவனம் அவருடைய அரசு உள்நாட்டு நிர்வாகத்திலும் வடக்கே எழுந்த கலகக்காரர்களை அடக்கி வைப்பதிலும் திரும்பியிருந்தமையால் வள்ளியூர், களக்காடு முதலிய இடங்கள் உட்பட கிழக்குப் பகுதிகளைக் காப்பதிலும் நிர்வகிப்பதிலும் எடுக்க வேண்டிய முயற்சிகளைக் கைவிட்டுவிட்டார். திருச்சிராப்பள்ளியிலிருந்த நவாபின் கவர்னர் இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டு, மதுரை மாநிலத்திற்குச் செல்லும் அந்த வழியிலமைந்த