பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

415 கால்டுவெல்


கொள்வது அறிவுடைமையாகவும் முன் எச்சரிக்கையாகவும் அமையும் என்று உணர்ந்தார். அதன்படி இன்னும் நலன் தரத்தக்க ஒப்பந்தங்களையும் வரையறைகளையுமுடைய உடன்படிக்கை செய்யப்பட்டது. இந்த உடன் படிக்கையால் தென் இந்தியாவின் மிகப் பெரிய அரசனின் வலிமை வாய்ந்த உதவி திருவாங்கூருக்குக் கிடைத்தது. அதற்காக நவாபுக்கு 6000 ரூபாயும் யானை ஒன்றையும் ஒவ்வொரு ஆண்டும் கொடுக்க வேண்டியிருந்தது. அதற்கு ஈடாக வெளி நாட்டு உள்நாட்டுப் பகைவர்களிடமிருந்து திருவாங்கூரைக்காக்க எல்லா உதவியுமளிப்பதாக நவாபு உறுதி கூறினார். அதனால் தன்னைக் காவல் செய்யவும், பாதுகாக்கவும் வலிமைமிக்க இரண்டு கூட்டாளிகளைத்திருவாங்கூர் பெற்றது. கிழக்கு எல்லையிலே நவாபும் மேற்கே டச்சுக்காரர்களும் அஞ்சன் கோவிலில் ஆங்கிலேய வணிகர்களும் கூடத் தேவை ஏற்பட்டபோது உதவத் தயாராக இருந்தனர். (ப.172)

மக்புசுகானும் யூசுப்கானும்

கர்நாடக நவாபின் கீழ்ப் பாண்டிய அரசனின் நிர்வாகியாகத் (கவர்னர்) திருச்சிராப்பள்ளியில் தங்கி இருந்த மக்புசுகான் சாகிபு தன் எசமானன் - தலைவனுக்கு எதிராகக் குழப்பம் செய்து திருநெல்வேலியின் மேற்கு எல்லையில் மகாராசாவிற்கு உரிமையான கிழக்குப் பகுதியாகிய களக்காட்டின் மீது படையெடுத்தான். அங்குதங்கியிருந்தத் திருவாங்கூர் படையைத் தாக்கி ஆரம்பாலி எல்லைக்கு அவர்களை விரட்டி கானுடைய படைகளுடன்அவர்களைத் தொடர்ந்து சென்றான். இதைக் கேள்வியுற்ற மகாராஜா அப்போது திருவனந்தபுரத்தில் தங்கியிருந்த தம்பி குமரன் செம்பகராமன் பிள்ளை என்ற பெயர் கொண்ட உள்நாட்டுப் படைத் தலைவனை அவனது படையுடன், முற்றுகையிட்ட படையை எதிர்த்துச் செல்லக் கட்டளையிட்டார். அவன் உடனே புறப்பட்டான். இந்த வலிமை வாய்ந்தவீரன் எதிரியைச்சந்தித்துச் செய்த போர் கடுமையாகவும் உறுதியுடனும் அமைந்ததால் மகமதியத் தலைவன் ஆரம்பாலி எல்லையிலிருந்து பின்வாங்கும் படியாயிற்று. ஆனால் கான் களக்காட்டைத் தன்வசம் வைத்துக் கொண்டதன்றி செங்கோட்டை மாவட்டம், திருவாங்கூருக்குச் சொந்தமான மற்ற கிழக்கு மாவட்டங்கள் எல்லாவற்றினுடைய உரிமையையும் மேற்கொண்டான்.

மகாராசா இந்தச் செய்தியை நவாபுக்குத் தெரிவித்தார். நவாபோ ஏற்கனவே கீழ்ப்படியாமையும் முரட்டுத்தன்மையும் உடையவனாக இருந்த கானிடம் மிகுந்த வெறுப்புக் கொண்டிருந்தார். அதனால் மக்பு சுகானின் இடத்தில் புதிய ஆளுநரை நியமிக்கும் எண்ணமும் கொண் டிருந்தார். யூசுப்கான் என்ற பெயருடைய மிக்க திறமைவாய்ந்த ஒரு