பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 416

 வனை நியமித்து கலகக்காரனான மக்புசு கானுக்கு அடுத்தவனாக அனுப்பி வைத்தார். யூசுப்கான் திருச்சிராப்பள்ளிக்கு வந்ததும் கீழ்ப்படித லில்லாத (அடக்கமில்லாத) கவர்னரை அடக்குவது மிகுந்த தொல்லை யான செயல் என்பதை அறிந்தான். எனவே மகாராசாவின் உதவியை நாடினான்.கர்நாடக நவாபும் சென்னையிலிருந்த கிழக்கிந்திய கம்பெனியும் அதே நேரத்தில் மகாராசாவை கலகக்கார மக்புசுகானை ஒடுக்க யூசுப் கானுடன் ஒத்துழைக்கும்படி கேட்டு கொண்டனர். மகாராசாவும் மகிழ்வோடு அவர்கள் விருப்பத்திற்கு இணங்கினார். அப்போது தோவளாயில் இருந்த தம்பி குமரன் செம்பகராமன்தலைமையிலிருந்த 5000 வீரர்களை யூசுப்கானுடன் சேரும்படியும் கட்டளையிட்டார். கொய்லானிலிருந்து 10000 வீரர்கள் அரியன்காவு கணவாய் வழியாகச் செங்கோட்டைக்கு அனுப்பப்பட்டார்கள்.

இப்பொழுது யூசுப்கான் 20,000 வீரர்களடங்கிய வலிமைவாய்ந்த படைக்குத் தலைவனாயிருந்தமையால் அப்படை வடகரை பாளையக் காரரைத் துரத்துவதற்கு உதவியது. அடுத்து அதுவரை ஏற்றிருந்த நிலையை விட்டு விட்டு மக்புசுகான் ஓடிவிட்டான். யூசுப்கான் தன் உரிமையை நிலைநாட்டினான்.

மகாராசர் உடனடியாக அளித்த உதவிக்கு கைமாறாக யூசுப்கான் அவருக்குரிய கிழக்குநாடுகளையெல்லாம் திரும்பிக் கொடுத்துவிட்டான். களக்காடு மறுபடியும் மாமன்னருடைய நாட்டின் பகுதியாயிற்று.

எனினும் மகாராசா நீண்டநாட்களுக்கு களக்காட்டின் உரிமையை வைத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் அவர் மிக மாறுபட்ட சூழ்நிலை யில் எல்லை நாடுகளின் இந்தப் பகுதியை இழந்துவிட்டார். நவாபினு டைய கவர்னரான யூசுப்கான் இப்பொழுது முந்திய கவர்னரைப் போல எசமானனுக்கு அடங்காமல் நவாபினுடைய அதிகாரத்தை ஆட்டுவதற்கு முயற்சித்துத் தனிப்பட்ட தலைவனாகத் தன்னை அமைத்துக் கொண்டான். இந்தக் குறிக்கோளை நிறைவு செய்து கொள்ள இந்தியா விலிருந்த பிரஞ்சுக்காரர்களிடமிருந்து யூசுப் உதவி பெற்றான்.

ம.ஆ.937 (கி.பி. 1762இல்) நவாபு, ஆங்கிலேயர் இருவருடைய கூட்டுப்படை யூசுப்புக்கு எதிராக அனுப்பப்பட்டது. யூசுபோ, போருக்குச் செல்கின்ற தன்படைக்கு உதவுமாறு ஏற்கனவே திருவாங்கூர் மகாரா சாவை வேண்டினான். யூசுபின் வசமிருந்த தனிப்பட்ட பாண்டிய மாவட்டங்களைத் தானேவைத்துக் கொள்ள மன்னன் செய்யும் உதவிக்கு ஈடாக திருவாங்கூருக்கு ஒரு காலத்தில் உரிமையுடையதாக இருந்த பாளையங்கோட்டை உட்பட, திருநெல்வேலி நகரத்தின் மேற்கு