பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

417 கால்டுவெல்


எல்லைகள் எல்லாவற்றையும் தருவதாகக் கூறினான். ஆனால் கூரறிவுள்ள மகாராசாவோ யூசுபுக்கு உதவுவதால் அவருக்குக் கிடைக்கக் கூடிய நன்மை எதுவாக இருந்தாலும் அவர் நவாபுடன் செய்து கொண்ட பழைய உடன்படிக்கைக்குமாறாகச் செல்ல முடியாதென்றும் ஆங்கிலே யருக்கு எதிராகப் போரிட இயலாதென்றும் அறிவித்தார். யூசுப்புக்கு எதிரான கூட்டுப்படைக்குத் துணை செய்ய ஒரு வலிய படையைப் பேரரசர் திருச்சிராப்பள்ளிக்கு அனுப்பினார். எதிரியோ எதிர்ப்பு எவ்விதப் பயனுமளிக்காது என்பதைக் கண்டவுடன் போரைக் கைவிட்டான். கி.பி. 1762இல் நவாபின் ஆணைப்படி தூக்கிலிடப்பட்டான்.

பாண்டிய பேரரசுக்கு உரியதான மலைத் தொடரின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த எல்லா நாடுகளின் உரிமையையும் ஒதுக்கி விடுவது முறை என்று யூசுப்கானுக்குப் பின்னே வந்தவர் கருதினார். அதன்படி களக்காடு மட்டுமின்றி செங்கோட்டையும் திருவாங்கூருக்கு கிழக்கே அமைந்திருந்த எல்லா உடைமையும் நவாபின் ஆட்சிப் பகுதியோடு இணைக்கப்பட்டது.

நவாபு உரிமைகளைக் கைப்பற்றுதல்

மகாராசா மாணிக்கலாலா என்னும் பெயருடைய ஒரு தனிச் செய்தி யாளனைச் சென்னைக்கு அனுப்பினார். நவாபுவின் அலுவலர்கள் சட்ட விரோதமான முறையில் திருவாங்கூரைச் சேர்ந்த பகுதிகளைத் தன் பகுதியோடு இணைத்த அநீதியை எடுத்துச் சொன்னார். ஆனால் அண்மையில் பெற்ற வெற்றியின் களிப்பிலும் யூசுபிற்குக் கிடைத்த தண்டனையின் மகிழ்ச்சியிலும் திளைத்துக் கொண்டிருந்த முசல்மான், மகாராசா அனுப்பிய செய்தியாளனின் கூற்றுக்குச் செவிசாய்க்கவில்லை. எனவே மகாராசா சென்னை ஆளுநரின் எண்ணத்தைக் கேட்க வேண்டிய அவசியத்தில் இருந்தார். களக்காடு மாவட்டம் மற்றும் பிற கிழக்குப் பகுதிகள் மகாராசாவிற்கு உரிமையானவை என்பதை ஒரு காலத்தில் ஏற்றுக் கொண்ட ஆளுநரும் தற்பொழுது தமது கருத்தில் உறுதியற்ற வராக இருந்தார். சுமுகமான பேச்சுவார்த்தைக்குப் பின் செங்கோட்டை கன்னியாகுமரி உள்ளிட்ட திருவாங்கூர்ப் பகுதிகளில் சிலவற்றைத் திருப்பித்தர நவாபு ஒத்துக் கொண்டான்.

களக்காட்டைப் பெறுதல்

பன்னெடுங்காலமாகத் திருவாங்கூர்க்கு உரிமையாயிருந்து வந்த களக்காடு மாவட்டத்தைச் சட்டத்திற்குப் புறம்பான முறையில் இணைத்திருப்பது முகம்மதியத் தலைவனுக்கு மனநிறைவை அளிக்க வில்லை. அது அண்மையில் பெளதிமிராகிடமிருந்து விலைக்கு வாங்