பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 418


கப்பட்டது. அவ்வாறு வாங்கியது அவனுக்குப் பின்வந்த நவாபு, கிழக் கிந்திய கம்பெனி ஆகிய இருவராலும் உறுதிசெய்யப்பட்டது. களக்காடு மாவட்டத்தில் முன்னைய ஆண்டுகளில் தண்டிய கொஞ்ச வரு மானத்தைக் கேட்டு தற்பொழுது கட்டாயப்படுத்தினான் நவாபு, பின்னர் சென்னை ஆளுநர் திரு. இராபர்ட் பர்ச் தலையீட்டால் ஒரு முடிவு ஏற்பட்டது. இவர் நவாபுக்குத் தொடர்பான செய்திகளை முடித்து வைத்து கி.பி.1765இல் ஒரு மடலுக்குப் பதில் போடும்பொழுது ஆளுநருக்கு எழுதியிருந்தார். அந்த கடிதத்தின் விளைவால் ஆங்கில கம்பெனி சில நடவடிக்கைகளை எடுத்து நவாப்பின் வெற்றிகளைக் கட்டுப்படுத்தியது. கவர்னர் இதற்கு உதவுவதாக உறுதியளித்தார். சாகசியன் மகாராசா கவர்னரின் கருத்தினை அவமதித்தார். இக்குழப்பமான சூழலில் நவாப்பின் நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலை ஆங்கில கம்பெனிக்கு ஏற்பட்டது.

களக்காட்டைப் பெறுவதனை விட்டுவிடல்

நவாபுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் முக்கியமான அம்சங்கள் பின் வருவன. களக்காடு தாலுகாவினுடைய அனைத்து உரிமைகளையும் திருவிதாங்கூர் விட்டுவிட வேண்டும். அவருடைய கப்பத் தொகை ரூ. 15,000-க்கும் மேலானது. அவரிடம் இரண்டு லட்சம் ரூபாயை களக்காடு மாவட்டத்தின் தேவைகளுக்காக வேண்டப்பட்டது. நவாபுக்கு எதிராகப் பாளையக்காரர் படை எப்பொழுதும் பயன்படுத்தப்பட மாட்டாது. மகாராசா, நவாபுக்கு உதவியாக மதுரை, திருநெல்வேலி ஆகியவற்றின் மீது படையெடுத்து வரவேண்டும்; நவாப் திருவிதாங்கூருக்கு அதனுடைய அனைத்து உள்நாட்டு போர்களிலும் படை கொடுத்து உதவவேண்டும்.

பிரிட்டிஷாருக்கு எதிராகத் திருவாங்கூர் தம் படைப் பிரிவை அனுப்புதல்

ஹைதர் அலிகானின் உரிமையற்ற செயல்களைப் பற்றிய அறிக்கைகள் மகாராசாவால் சென்னை கவர்னருக்கும், பம்பாய், வங்காள கவர்னர்களுக்கும் அனுப்பப்பட்டன. இதனால் ஒரு பொதுப் போர் ஹைதருக்கு எதிராக நடந்தது. மதிப்பிற்குரிய கிழக்கிந்திய கம்பெனியரால், மகாராசாபடைகளுடன் ஒத்துழைக்குமாறு வேண்டப்பட்டார். மகாராசாவும் அவ்வாறு செய்வதற்கு விருப்பமுடன் இசைவளித்தார். என்றாலும் பலர் செல்வங்களும் சிலர் வாழ்வும் அழிந்ததைத் தவிர்க்க முடியவில்லை.

ஹைதர் அலிக்கு எதிராகத் திருவாங்கூர் உதவுதல்

கிழக்கிந்திய கம்பெனியாரால் போர் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.