பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

419 கால்டுவெல்


மகாராசா அவர்களை அடக்கி ஆட்படுத்த துணை செய்தார். திருவிதாங் கூரிலுள்ள காலாட்படைகளையும் குதிரைப்படைகளையும் கம்பெனியின் படைப்பிரிவு அதிகாரிகள் மூலம் கல்கத்தா, பாலக்காடு, திருநெல்வேலி போன்ற சேய்மையிடங்களுக்குக் கொண்டு சென்றனர்.

திருவிதாங்கூரின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு வேலைகளைத் திறமாகச் செய்தபின்னர் மகாராசா தன் படையின் ஒரு பகுதியைத் தகுதிமிக்க ஒரு அதிகாரியின் தலைமையின் கீழ் கல்கத்தா மேஜர் ஆபிங்டன் கீழுள்ள பம்பாய் படையுடன் பங்கேற்க அனுப்பி வைத்தார். அவரது படைகள் தீரமுடன் போராடிச் சிறந்த முறையில் வெற்றிபெற்றன. திருவாங்கூர் படையின் அடுத்த பகுதியை ஹைதர் அலிக்கு எதிராகப் பிரிட்டிஷ் படையுடன் சேர்ந்து போராட திருநெல்வேலிக்கு அனுப்பினார். அங்கு அப்படை இரண்டு ஆண்டுக்காலம் தங்கியிருந்தது.

திருநெல்வேலி இராமேஸ்வரம் வழியாக மகாராசா பயணம் செய்தார்

ம.ஆ959 (கி.பி.1784இல்) மகாராசா மதச்சடங்கு நிகழ்த்தும் பொருட்டும், தம் நாட்டின் பல பகுதிகளையும் திருவாங்கூரின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள பகுதிகளையும் பார்வையிடும் பொருட்டும் இராமேஸ்வர யாத்திரையைத் தொடங்கினார். பயண வழியிலுள்ள திருநெல்வேலி, மதுரை மாவட்டப் பகுதிகளையும் பார்வையிடத் திட்டமிட்டார்.

தம் தல யாத்திரையைத் தொடங்குவதற்கு முன்னர் அவர் ஆற்றலாலும், ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி, ஆற்காடு நவாப் ஆகியோரின் உதவியாலும் சில ஏற்பாடுகளைச் செய்தார். திருநெல்வேலி, மதுரை மாவட்டப் பகுதிகளில் நவாப்பின் ஆட்சியும் பாளையப் பட்டுக்காரர்களின் ஆட்சியும் முரட்டுத்தனமாகவும் சட்டம் ஒழுங்கற்றத் தன்மையிலும் நடைபெற்று வந்தது.

பாளையக்காரர்களால் ஆபத்து

மகாராசா கிழக்கிந்திய கம்பெனியாரிடமிருந்து சில சிப்பாய்களின் துணையையும், நவாப்பிடமிருந்து சில அதிகாரிகளின் உதவியையும் பெற்றுக் கொண்டார். தம் படைகள் பின்தொடர மகாராசா தோரணை யுடனும், துந்துபி, பேரிகை ஆகியவற்றின் முழக்கத்துடனும் புறப்பட்டுச் சென்றார்.

பொது வேலைகளைத் தேர்ந்தெடுத்தல்

தம் பயணத்தில் திருநெல்வேலி மதுரை மாவட்டங்களில் உள்ள